சுட்டுப் படுகொலை செய்யப்பட்ட 2 பொலிஸாருக்கும் பதவி உயர்வு! – சம்பவ இடத்தை நேரில் பார்வையிட்டார் பொலிஸ்மா அதிபர்

மட்டக்களப்பு, வவுணதீவுப் பகுதியில் சுட்டுக்கொலை செய்யப்பட்ட பொலிஸ் கான்ஸ்டபிள் இருவருக்கும் பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது.

குறித்த இருவருக்கும் பொலிஸ் சார்ஜன்ட் ஆக பதவி உயர்வு வழங்க பொலிஸ்மா அதிபர் உத்தரவிட்டுள்ளார்.

குறித்த சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்வதற்காக பொலிஸ்மா அதிபர் பூஜித ஜயசுந்தர, குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் மற்றும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர ஆகியோர் நேற்று மட்டக்களப்புக்குச் சென்றனர். இவர்கள் சம்பவம் இடம்பெற்ற இடத்தை நேரில் பார்வையிட்டனர்.

அத்துடன் இந்த சம்பவம் தொடர்பில் விசாரணை நடத்த குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் விசேட பொலிஸ் குழுவொன்று மட்டக்களப்புக்கு அனுப்பப்பட்டிருந்தது.

வவுணதீவு, வலையிறவு பாலத்திற்கு அருகில் உள்ள பொலிஸ் சோதனைச் சாவடியில் நேற்றுமுன்தினம் இரவு பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டிருந்த இரு பொலிஸ் உத்தியோகத்தர்கள் இனந்தெரியாத ஆயுததாரிகளினால் நேற்று அதிகாலை சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர்.

இந்தத் துப்பாக்கி சூட்டில் வவுணதீவு பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் காலியைச் சேர்ந்த நிரோஷன் இந்திக, கல்முனையைச் சேர்ந்த கணேஸ் தினேஸ் ஆகியோரே இவ்வாறு உயிரிழந்திருந்தனர்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *