சதிகாரரான சபாநாயகரை கைதுசெய்க! மைத்திரியிடம் சு.க. வலியுறுத்து

நிறைவேற்று அதிகாரம்கொண்ட ஜனாதிபதியின் கட்டளைக்கு மதிப்பளிக்காது, நாடாளுமன்றத்தை அகௌரவப்படுத்தி அரசியல் நெருக்கடியை ஏற்படுத்திய சபாநாயகர் கரு ஜெயசூரியவை கைதுசெய்யும் ஆணையை ஜனாதிபதி பிறப்பிக்க வேண்டும் என ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் நுவரெலியா மாவட்ட அமைப்பாளர் பெரியசாமி பிரதீபன் வலியுத்தினார்.

ஹட்டனில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது,

நாட்டில் இறைமையை பாதுகாக்க வேண்டிய பொறுப்பு சபாநாயகர் வசம் உள்ளது. இதற்கு முற்பட்ட காலப்பகுதியில் சபாநாயகர்கள் ஜனாதிபதியின் தீர்மானத்திற்கு மதிப்பளித்து செயற்பட்டமை சுட்டிக்காட்டதக்க விடயமாகும்.

சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க ஜனாதிபதியாக இருந்தபொழுது 106 ஆசனங்களை கொண்ட ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியயை பிரதிநிதித்துப்படுத்துகின்ற மஹிந்த ராஜபக்ஷவை பிரதமராக தெரிவு செய்தார். அதற்கு அடுத்த படியாக 52 பாராளுமன்ற உறுப்பினர்களை கொண்ட ஐக்கிய தேசிய கட்சியின் ரணில் விக்கிரமசிங்க அவர்களை பிரதமராக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவு செய்தார்.

அக்காலகட்டங்களில் எந்தவொரு சபாநாயகரும் இவ்வாறான ஒரு அநாகரிகமான செயலில் ஈடுப்படாது. நாட்டினுடைய ஜனாதிபதியின் தீர்மானத்திற்கு மதிப்பளித்தனர்.

இவ்வாறான நிலையில் சபாநாயகரின் நடவடிக்கை கண்டிக்கதக்க விடயமாகும் என அவர் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *