சபாநாயகரின் கொடும்பாவியை எரித்து மஹிந்த அணி போராட்டம்!

சபாநாயகர் கருஜயசூரிய கட்சிசார்பாக செயற்படுவதாக சுட்டிக்காட்டு அவருக்கு எதிராக மஹிந்த அணியினர் கண்டி – பூஜாபிட்டிய நகரில் இன்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தலைமையில் முன்னெடுக்கப்பட்ட இப்போராட்டத்தில், சபாநாயகரின் கொடுப்பாவி எரிக்கப்பட்டு – எதிரிப்பு வெளியிடப்பட்டது.

அதேவேளை, பொதுத்தேர்தலை உடனடியாக நடத்துமாறும் போராட்டக்காரர்கள் கோஷம் எழுப்பினர். ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்பாடுகளையும் வன்மையாகக் கண்டித்தனர்.

இப்போராட்டத்தால் பூஜாபிட்டிய நகரில் சிறிதுநேரம் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. பாதுகாப்பும் வழமையைவிட பலப்படுத்தப்பட்டிருந்தது.

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *