வெள்ளியன்று நாடாளுமன்றம்வர வெளிநாட்டு இராஜதந்திரிகளுக்கு தடை- பொதுமக்களுக்கும் கதவடைப்பு!

நாடாளுமன்றம் நாளை மறுதினம் வெள்ளிக்கிழமை முற்பகல் 10 மணிக்கு சபாநாயகர் கருஜயசூரிய தலைமையில் கூடவுள்ளது.

தெற்கு அரசியலில் பெரும் குழப்பம் ஏற்பட்டுள்ள நிலையில் அதற்கு தீர்வுகாணும் வகையில் சபை அமர்வுகள் முன்னெடுக்கப்படுமா என பலரும் வினாக்களை தொடுக்கின்றனர். எனினும், அதற்குரிய அறிகுறிகள் அரசியலில் தென்படுவதாக தெரியவில்லை.

வெள்ளியன்றும் பார்வையாளர் கலரியும், விருந்தினர் கலரியும் மூடப்பட்டிருக்கும். ஆகவே, பொதுமக்களோ அல்லது விசேட பிரமுகர்களோ சபை நடவடிக்கைகளை கண்காணிப்பதற்கு – அவதானிப்பதற்கு அனுமதிக்கப்படமாட்டார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த திங்கட்கிழமையும் இதே நடைமுறை பின்பற்றப்பட்டது.

நாடாளுமன்றத்தில் கடந்த 14 ஆம் திகதி முதல் கடும் மோதல் இடம்பெற்றுவருகின்றது. கடந்த வெள்ளியன்று நடைபெற்ற சபைஅமர்வின்போது – பார்வையாளர் கலரியிலிருந்த சிலர் கூச்சல்  சத்தம் எழுப்பினர். வெளிநாட்டு இராஜதந்திரிகளும் நிலைமைகளை உடனுக்கு உடன் சமூக வலைத்தளங்களில் வெளிப்படுத்தினர். இவ்வாறானதொரு பின்புலத்திலேயே கலரிகள் மூடப்பட்டுள்ளன.

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *