மஹிந்த – மைத்திரி சூழ்ச்சிக்கு எதிராக கண்டியில் களமிறங்குகிறது ஐ.தே.க.! 24 இல் மாபெரும் போராட்டம்!!

ஜனநாயகத்தைப் பாதுகாப்பதற்காக எதிர்வரும் 24 ஆம் திகதி கண்டியில் மாபெரும் போராட்டத்தை நடத்துவதற்கு ஐக்கிய தேசிய கட்சி தீர்மானித்துள்ளது.

ஐக்கிய தேசியக் கட்சியின் முக்கிய கூட்டம் இன்று முற்பகல் கட்சித் தலைவரான ரணில் விக்ரமசிங்க தலைமையில் அலரி மாளிகையில் நடைபெற்றது. இதன்போதே மேற்படி முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

சூழ்ச்சி அரசை வீட்டுக்கு விரட்டி அடித்து – நல்லாட்சியை பாதுகாத்துக்கொள்ளும் நடவடிக்கையின் ஓர் அங்கமாகவே அறவழிப் போராட்டம் கண்டியில் ஆரம்பமாகின்றது என்று ஐ.தே.கவின் பொதுச் செயலாளர் அகிலவிராஜ் காரியவசம் தெரிவித்தார்.

‘’ அரசமைப்புக்கு முரணான வகையில்  பின்கதவால் ஆட்சிக்கு வருவதற்கு மஹிந்தவும், அவரது சகாக்களும் முயற்சிக்கின்றனர். அவர்களின் பகல் கனவு ஒருபோதும் நனவாகாது. ஜனநாயக விரோதச் செயலுக்கு எதிராக அனைத்து சக்திகளையும் ஒருமையத்தின்கீழ் கொண்டுவந்து போராடுவோம்.

அதேவேளை, தேர்தலைக் கண்டு எமது கட்சி அஞ்சவில்லை. அரசமைப்பின் பிரகாரம் அது நடைபெறவேண்டும்.  அப்போது தேர்தலை சந்திப்பதற்கு தயாராகவே இருக்கின்றோம்.

ஜனநாயகத்தை பாதுகாக்ககோரி 24 ஆம் திகதி கண்டியில் போராட்டம் நடத்தப்படவுள்ளது. அதன்பின்னர் 27 ஆம் திகதி களுத்துறையில் நடத்தப்படும். தொழிற்சங்கங்களும், சிவில் அமைப்புகளும் எம்முடன் கைகோர்க்கவுள்ளன.” என்று  குறிப்பிட்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *