இலங்கையின் ஜனநாயகத்தில் நேற்றே மிக மோசமான நாள்! – ஜேர்மன் தூதுவர் கவலை

“15.11.2018 இலங்கையில் ஜனநாயகத்திற்கு மிக மோசமான நாள்” என்று இலங்கைக்கான ஜேர்மனியத் தூதுவர் Jorn Rohde தெரிவித்துள்ளார்.

இந்த விடயம் தொடர்பில் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவொன்றை அவர் இட்டுள்ளார்.

நாடாளுமன்றத்தில் நேற்று நடைபெற்ற மோசமான சம்பவங்களை சுட்டிக்காட்டியே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

“நவம்பர் 15ஆம் திகதி (15.11.2018) இலங்கையின் ஜனநாயகத்திற்கு மிக மோசமான நாள். இலங்கைக்கு என நீண்டகால ஜனநாயக பாரம்பரியம் உள்ளது.

சபாநாயகர் மீது பொருட்களை வீசுவதும் வாக்களிப்பைத் தடுப்பதும் ஜனநாயக நாடொன்றுக்குப் பொருத்தமான நடவடிக்கையில்லை” என்று அந்தப் பதிவில் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *