நீர் நிறைந்த குழிக்குள் வீழ்ந்து இரு சிறுவர்கள் பரிதாபப் பலி! – மன்னாரில் துயரம்
மன்னாரில் நீர் நிறைந்த குழிக்குள் வீழ்ந்து சிறுவர்கள் இருவர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
மன்னார் தோட்டவெளிப் பகுதியிலேயே இந்தச் சம்பவம் நேற்று சனிக்கிழமை இடம்பெற்றது.
தோட்டவெளியில் உள்ள நீர் நிறைந்த குழிக்கு நீராடச் சென்ற வேளையிலேயே சிறுவர்கள் இருவரும் உயிரிழந்தனர் என்று பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்தது.
7 மற்றும் 8 வயதுடையவர்கள் இருவரே இவ்வாறு உயிரிழந்தனர். விடத்தல்தீவின் மக்கள் வசிக்கும் பகுதியான தோட்டவெளியில் இன்பயூட் லிவிசன் மற்றும் அதே கிராமத்தைச் சேர்ந்த கனகராஜ் சசி றஜித் ஆகிய இரு சிறுவர்களுமே உயிரிழந்தனர் எனத் தெரியவந்துள்ளது.
இந்தச் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மன்னார் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.