சீரற்ற காலநிலையால் ஆயிரக்கணக்காணோர் பாதிப்பு – மண்சரிவு அபாய எச்சரிக்கையும் நீடிப்பு!

சீரற்ற காலநிலையால் 49 ஆயிரத்திற்கும் அதிகமான மக்கள் பாதிக்கப்பட்டிருப்பதாக அனர்த்தமுகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. சீரற்ற காலநிலை காரணமாக 49 ஆயிரத்திற்கும் அதிகமான மக்கள் பாதிக்கப்பட்டிருப்பதாக அனர்த்தமுகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

400 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளன. அவற்றுள் 100 வீடுகள் முற்றாகச் சேதமடைந்துள்ளன.

மட்டக்களப்பு மாவட்டத்திலேயே அதிக பாதிப்புக்கள் ஏற்பட்டுள்ளன.

இடி மின்னல் தாக்கங்களினால் பல பாதிப்புக்கள் ஏற்பட்டிருப்பதாக குறிப்பிட்ட அவர் அவற்றிலிருந்துபொதுமக்கள் தம்மை பாதுகாத்துக் கொள்ளுமாறும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

நுவரெலியா, மாத்தளை ஆகிய மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்டிருக்கும் மண்சரிவு அபாயஎச்சரிக்கை இன்று மாலை வரை நீடிக்கப்பட்டுள்ளது.

சீரற்ற காலநிலையைத்தொடர்ந்து இந்த மாவட்டங்களுக்கு மண்சரிவு அனர்த்த எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. .

இந்த எச்சரிக்கையே இன்று மாலை வரை நீடிக்கப்பட்டிருப்பதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் உதவிப் பணிப்பாளர்பிரதீப் கொடிப்பிலி தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *