அலரிமாளிகையை கைவிடோம் – ஜனநாயக சமருக்கு தயாராகிறது யானைப்படை!

“ இலங்கையின் பிரதமராக ரணில் விக்கிரமசிங்கவே பதவிவகிக்கின்றார். எனவே, எத்தகைய அழுத்தங்கள், அச்சுறுத்தல்கள் வந்தாலும் அலரிமாளிகையை ஐக்கிய தேசியக்கட்சி விட்டுக்கொடுக்காது” என்று அக்கட்சியின் பொதுச்செயலாளரான அகில விராஜ் காரியவசம் தெரிவித்தார்.


அலரிமாளிகையில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.

“ அலரிமாளிகையை கைவிட்டுச்செல்வதற்கு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தீர்மானித்துவிட்டார் என சிலர் போலியான தகவல்களை பரப்பிவருகின்றனர். ஆட்சிமாற்றம் நடக்கவில்லை. சூழ்ச்சிமூலமே மாற்றமொன்று ஏற்படுத்தப்பட்டுள்ளது. அந்த சூழ்ச்சியை முறியடித்து நீதிக்கு உயிர்கொடுப்போம்.

நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிப்பதற்குரிய ஆதரவு எமக்கு இருக்கின்றது. 118 பேர் ஐக்கிய தேசியக்கட்சிக்கு ஆதரவளித்துள்ளனர். கட்சியை விட்டுச்சென்றவர்களும் மீண்டும் வரக்கூடும். ஏனைய சில கட்சிகளும் ஐக்கிய தேசியக்கட்சிக்கு நேசக்கரம் நீட்டியுள்ளனர். எனவே, ஜனநாயக வழியில் நல்லாட்சியை மீண்டும் உறுதிப்படுத்துவோம்” என்றும் அகில விராஜ் குறிப்பிட்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *