இலங்கையை 3 நாட்களில் அன்மிக்கிறது தாழமுக்கம்!

வங்காள விரிகுடாவின் மத்திய பகுதி மற்றும் கிழக்கு நிலநடுக்கோட்டு இந்திய பெருங்கடல் பகுதியில் காணப்படுகின்ற தாழமுக்க பகுதியானது அடுத்து வரும் 03 நாட்களில் மேற்கு-வடமேற்கு திசையில் மிக மெதுவாக நகர்ந்து இலங்கையின் கரையை அண்மிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இது மிக மெதுவாக நகர்வதன் காரணத்தினால் எதிர்பார்க்கப்பட்ட மழை வீழ்ச்சியானது ஓரிரு நாட்கள் தாமதம் அடைகின்றது

அதுமட்டுமல்லாது தென் அரைக் கோளத்தில் உருவாகி இருக்கின்ற Darian எனும் சூறாவளியை நோக்கி இந்த பகுதியில் இருந்து காற்று ஈர்க்கப்படுகின்ற காரணத்தினாலும் வங்காள விரிகுடாவில் காணப்படுகின்ற இந்த தாழமுக்க பகுதியானது தீவிரமடைய முடியாமலும் இருப்பதன் காரணத்தினாலும் எதிர்பார்க்கப்பட்ட மழை வீழ்ச்சி சற்றே தாமதமாகின்றது

தென்னரைக் கோளத்தில் உருவாகியுள்ள சூறாவளியானது மேலும் தெற்கு நோக்கி நகர்ந்து அகன்று சென்ற பின்னர் வங்காள விரிகுடா பிராந்தியத்தில் காணப்படுகின்ற தழமுகத்தினால் மழை வீழ்ச்சி அதிகமாக கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது

க.சூரியகுமாரன்,
முன்னாள் சிரேஷ்ட வானிலை அதிகாரி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *