உலக மக்களிடத்தில் தங்கத்தின் தேவை திடீர் அதிகரிப்பு!

உலக மக்களிடையே 2011ஆம் ஆண்டுக்குப் பின்னர் கடந்த ஆண்டு தங்கத்திற்கான தேவை புதிய உச்சத்தைத் தொட்டதாகத் தெரிய வந்துள்ளது.

உயர்ந்துவரும் பணவீக்கத்திலிருந்து தற்காத்துக்கொள்ள மத்திய வங்கிகளும் முதலீட்டாளர்களும் அதிக அளவு தங்கம் வாங்குவதே அதற்குக் காரணம் என்று புள்ளி விவரங்கள் தெரிவித்துள்ளது.

கடந்த ஆண்டு சுமார் 4,740 டன் தங்கம் வாங்கப்பட்டதாக  World Gold Council தெரிவித்துள்ளது.

கடந்த சுமார் 50 ஆண்டுகளில் காணாத அளவு, சென்ற ஆண்டு மத்திய வங்கிகள் ஆக அதிகமாக 1,136 டன் தங்கத்தை வாங்கியுள்ளன.

உக்ரேன் போரால் மோசமடைந்த பணவீக்கம் அதற்குக் காரணம் என்று தெரிவிக்கப்பட்டது.

எனினும் தங்க விலை உயர்வால் தங்க நகைகளுக்கான தேவை சென்ற ஆண்டு சற்றுக் குறைந்தது.

2,086 டன் தங்க நகைகள் சென்ற ஆண்டு வாங்கப்பட்டுள்ளதென தெரிவிக்கப்படுகின்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *