போராட்ட வடிவம் மாறுகிறது – கொடும்பாவி எரித்து தொழிலாளர்கள் விண்ணதிரக் கோஷம்!
ஆயிரம் ரூபா சம்பள உயர்வை உடனடியாக வழங்குமாறு பெருந்தோட்டக் கம்பனிகளை வலியுறுத்தி அட்டன், லெதண்டி தோட்ட தொழிலாளர்கள் இன்று சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கம்பனிகளின் பாரபட்சமான செயற்பாடுகளுக்கு எதிர்ப்பை வெளியிடும் வகையில் கொடுப்பாவியும் எரிக்கப்பட்டது.
அட்டன் – நோட்டன் பிரதான வீதியை மறைத்து இன்று (17) காலை 10 மணியளவிலே லெதண்டி தோட்ட சந்தியில் ஆர்பாட்டத்தை முன்னெடுத்தனர்.
200 இற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் கலந்துகொண்ட இந்த ஆர்பாட்டத்தின் போது, தோட்டதுறைக்கு 50 இலட்சம் ருபாவிற்கு சொகுசு வண்டியை வழங்கும் தோட்ட கம்பனிகள், தோட்ட தொழிலாளி உதியம் வழங்க தயங்குவது ஏன் என்று கோஷமெழுப்பினர்.
முதலாளிமார் சம்மேளத்திக்கு எதிராக கொடும்பாவியை நடு வீதியில் எரித்ததுடன் சமையல் பாத்திரங்ஙளை வீதியில் உடைத்தும் ஆர்பாட்டம் செய்தனர்.
ஆர்பாட்டத்தினால் இரண்டு மணித்தியாலங்கள் வரை போக்குவரத்து தடைப்படதுடன், அட்டன் பொலிஸாரின் தலையீட்டின் பின் ஆர்பாட்டம் நிறைவடைந்தது.
மு.இராமச்சந்திரன்