கூட்டுஒப்பந்தப் பேச்சில் ‘கறுப்புபடை’!

பெருந்தோட்டக் கம்பனிகளின் செயற்பாடுகளுக்கு கடும் எதிர்ப்பை வெளியிடும் வகையில் தொழிற்சங்கப் பிரமுகர்கள் இன்றைய தினம் (15) கறுப்பு உடை அணிந்தே சந்திப்புக்கு சென்றிருந்தனர்.


பெருந்தோட்டத்தொழிலாளர்களின் சம்பளம் உட்பட இதர விடயங்களை தீர்மானிக்கின்ற கூட்டுஒப்பந்தப் பேச்சு இன்று பிற்பகல் கொழும்பில் நடைபெற்றது.

இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ், இலங்கை தேசிய தோட்டத்தொழிலாளர் சங்கம், கூட்டுகமிட்டி ஆகியவற்றின் பிரதிநிதிகள் தொழிலாளர்கள் சார்பில் பங்கேற்றனர்.

தொழிலாளர்களால் கோரப்படும் சம்பள உயர்வுக்கு உரிய பதிலை வழங்காமல் இழுத்தடிப்பு செய்துவரும் முதலாளிமார் சம்மேளனத்தின் செயற்பாட்டைக் கண்டிக்கும் வகையிலேயே தொழிற்சங்கவாதிகள் கறுப்பு உடையணிந்து களமிறங்கியுள்ளனர்.

அதேவேளை, 100 ரூபா சம்பள உயர்வுக்கே கம்பனிகள் தயாராக இருக்கின்றது. அத்துடன், கூட்டுஒப்பந்தத்திலுள்ள நலன்புரி விடயங்கiயும் கருத்திற்கொள்ள அவை மறுத்துவருகின்றன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *