பாராளுமன்ற கதிரை என்பது ஒரு சங்கீத கதிரை அல்ல

பாராளுமன்ற கதிரை என்பது ஒரு சங்கீதக் கதிரையல்ல ஏ.சி.எஹியாகான் தலைமை காரியாலயத்தில் இடம்பெற்ற கூட்டத்தில் கூறியது
☟☟☟☟
பாராளுமன்ற கதிரை என்பது ஒரு சங்கீதக் கதிரையல்ல எதிர்வருகின்ற பாராளுமன்ற தேர்தலிலே விசேடமாக கல்முனை தொகுதியிலே வருகின்ற பாராளுமன்ற உறுப்பினர் மிகவும் கூடுதலான பணியை முஸ்லிம் சமூகத்தின் நகரமாக கருதப்படும் கல்முனையை பாதுகாப்பதற்கான நடவடிக்கையில் ஈடுபடக்கூடியவராக இருக்க வேண்டும் அதனால் தான் நாங்கள் கூறுவது இருக்கின்ற பாராளுமன்ற உறுப்பினர் அவர்கள் சம்மாந்துறை தொகுதி பாராளுமன்ற உறுப்பினரை போலல்ல பொத்துவில் தொகுதி பாராளுமன்ற உறுப்பினரை போலல்ல கல்முனையில் இருக்கின்றவருக்கு மிகவும் கூடுதலான பனி இருந்தன அவர் அதற்கு கஷ்டப்பட்டு இருக்கின்றார் என்பது எங்களுக்கு தெரிந்த விடயம் ஆகையினால் எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில் ஒரு குறிப்பிட்ட ஒரு இடத்தை ஒரு ஊரை
மையமாக கொண்டு நடக்கின்ற பாராளுமன்ற உறுப்பினராக தெரிவு செய்ய கூடாது.
வர இருக்கின்ற பாராளுமன்ற உறுப்பினர் அவர்கள் கல்முனை தொகுதியில் மிகவும் கூடுதலான பணியை செய்ய வேண்டி இருக்கின்றது ஏனென்றால் அலி சப்ரி என்கின்ற சிரேஷ்ட சட்டத்தரணி அவர்களும் வந்து சொல்லி சென்று இருக்கிறார் கல்முனை முஸ்லீம் மக்களின் தலை நகரம் என்று அதேபோன்று முஸ்லீம் மக்களின் தலை நகரமாக கருதுகின்ற கல்முனையை பாதுகாக்கப்பட வேண்டும் அங்கே இருக்கின்ற துவேசத்தை கக்குகின்ற அங்கே இருக்கின்ற பாராளுமன்ற உறுப்பினர் மாற்று மதத்தை சேர்ந்தவர்கள் கல்முனையை சிதறடிக்க வேண்டுமென்று ஓடித்திரிகின்றார்கள் அவர்களோடு உறவு வைத்திருக்கின்றவர்களை பாராளுமன்றத்திற்கு கொண்டு சென்று எதுவுமே செய்ய முடியாது ஆகையினால் மக்கள் மிகவும் நிதானமாக சிந்தித்து வாக்களிக்க வேண்டிய கால கட்டத்தில் நாங்கள் இருக்கின்றோம்.
அவர் மேலும் பேசுகையில் இதை ஒரு மடமையாக இதை ஒரு இலகுவான விடயமாக பார்க்க முடியாது சாய்ந்தமருதை வேறாக பிரித்து நகர சபையை தடுத்தார் என்கின்ற கருத்து ஒருபக்கம் இருக்க
கல்முனையை பாதுகாத்தார் என்பதில் மாற்று கருத்துக்கிடமில்லை.
ஆகையினால் வருகின்ற பாராளுமன்ற உறுப்பினர் அவர்கள் சங்கீத கதிரையைப்போன்று எதிர் பார்த்தவராக இருக்க முடியாது ஆகையினால் அவர் கல்முனை தொகுதியில் கல்முனை நமது மறைந்த தலைவர் அஷ்ரப் அவர்களின் சிந்தனையில் இருக்கின்ற ஒரு நகரம் எங்களுக்கு இருக்கின்ற ஒரு நல்ல நகரம் முஸ்லீம் மக்களின் ஆதிக்கம் கூடுதலாக இருக்கின்ற நகரம் என்ற சிந்தனையில் அவர் அதை பாதுகாக்கக் கூடியவராக இருக்க வேண்டும் ஆகையினால் உங்களுக்கு அதையே நான் மிகவும் தெளிவாக கூறுகின்றேன் கல்முனை தொகுதியில் இருக்கின்ற பாராளுமன்ற உறுப்பினருக்கு இருக்கின்ற
தலை இடிகள்
பொத்துவில் தொகுதி இருக்கின்ற பாராளுமன்ற உறுப்பினருக்கோ சம்மாந்துறையில் இருக்கின்ற தொகுதி பாராளுமன்ற உறுப்பினனருக்கோ இல்லை
இங்கே இருக்கின்ற மிகவும் கூடுதலான பனி மாற்று சமூகத்தினரோடு அவர்கள் கல்முனையை சிதறடிக்க வேண்டுமென்று ஓடித்திருக்கின்ற போது அதை அவர்களின் தத்துவத்தை வைத்துக்கொண்டு ஒரு நல்ல நல்ல அணுகு முறையை கொண்டு வந்து தலை நகரமாக பாதுகாக்கப்படுகின்ற கல்முனை பாதுகாக்கப்பட வேண்டும் தனிப்பட்ட ஒருவரின் பிரச்சினையை மையமாக வைத்துக்கொண்டு கல்முனையை கூறுபோட்டு மாற்று மதத்தினருக்கு தாரை வாத்துக்கொடுக்க முடியாது ஆகையினால் மக்கள் தகுந்த பாடத்தை இம்முறை வரவிருக்கின்ற பாராளுமன்ற உறுப்பினர் எப்படி பட்டவர்? இதை எமது முஸ்லிம் மக்களுக்காக செய்யக்கூடியவரா? என்பதை பார்த்துதான் வாக்களிக்க வேண்டும் என்று எமது மக்களிடம் கேட்டுக்கொள்கின்றேன் அதைப்போல எதிர்வரும் மாகாண சபை தேர்தலில் நான் போட்டியிட தயாராக உள்ளேன் அதற்கான வேலைத்தளங்களை நான் மக்களுக்காக செய்து கொண்டு இருக்கிறேன் என்பதை மக்களுக்கு தெரிவித்துக்கொள்கின்றேன்

ஏ.சி.எஹியாகான்
ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ்
உயர்பீட உறுப்பினர்
அம்பாறை மாவட்ட பொருளாளர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *