‘ அச்சுறுத்தல்களுக்கு அடிபணியோம்’ – பதிலடி பயங்கரமாக இருக்கும் – சவூதி மிரட்டல்

காணாமல் போன பத்திரிகையாளர் தொடர்பான பொருளாதார மற்றும் அரசியல் மிரட்டல்களை சவூதி மறுத்துள்ளது – என அந்நாட்டின் அரசு செய்தி முகமை செய்தி வெளியிட்டுள்ளது.

சவூதி அரேபியாவின் பிரபல பத்திரிகையாளர் ஜமால் கசோஜி, இஸ்தான்புலில் உள்ள தமது நாட்டு தூதரகத்திற்கு விவாகரத்து ஆவணமொன்றை வாங்குவதற்காக சென்றார். அதன் பின் அவரை காணவில்லை.

துருக்கி அதிகாரிகள் ஜமால் தூதரகத்திலேயே கொல்லப்பட்டிருக்கலாம் என நம்புகிறார்கள். ஆனால், அவர் தூதரகத்திலிருந்து கிளம்பிவிட்டார் என்கிறது சவூதி.

ஒரு காலத்தில் சவூதி அரச குடும்பத்தின் ஆலோசகராக இருந்தவர், பின் சவூதி அரசாங்கத்திற்கு எதிராக திரும்பினார். அதற்கு பிறகு அவர் சவூதியிலிருந்து வெளியேறினார். தொடர்ந்து சவூதி முடியாட்சிக்கு எதிராக எழுதி வந்தார். இந்த சூழலில் அவர் அக்டோபர் 2ஆம் தேதி காணாமல் போனார்.

செளதி கூறுவதென்ன?

அச்சுறுத்தல், பொருளாதார தடைகள் அல்லது அரசியல் அழுத்தங்கள் மூலமாக எங்களை சிறுமைப்படுத்தும் முயற்சிகளை மறுப்பதில் ]அரசு இன்னும் உறுதியாக இருக்கிறது என சவூதி அரசு செய்தி முகமை கூறுகிறது.

தங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டால், அதனைவிட பெரிதாக பதில் நடவடிக்கை எடுக்கும். உலக பொருளாதாரத்தில் சவூதி வியத்தகு பங்கை வகிக்கிறது என சவூதிஅரசு கூறியதாக அந்த செய்தி விவரிக்கிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *