பிறந்த 40 நாட்களான சிசுவின் வயிற்றில் கரு!

சமீபத்தில், அமெரிக்காவில் நிரந்தர புன்னகையுடன் ஒரு குழந்தை பிறந்த சமபவம் ஒன்று இணையதளத்தில் வைரலானது. ஆயிரக்கணக்கான குழந்தைகள் தினமும் உலகில் பிறந்துகொண்டிருக்கும் வேளையில், அவற்றில் சில குழந்தைகள் நம்மை வியக்கவைக்கின்றது. அதுபோலவே, பீகாரில் பிறந்த ஒரு குழந்தையின் வயிற்றில் மற்றுமொரு கரு இருந்தது அனைவரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளது.

பிறந்து 40 நாட்களே ஆன ஒரு ஆண் குழந்தைக்கு வயிற்றின் வீக்கம் குறையாமல், குழந்தை சிறுநீர் கழிக்க முடியாமலும் தவித்து வந்துள்ளது. பயந்துபோன பெற்றோர் குழந்தையை மருத்துவமனைக்குக் கொண்டு சென்றுள்ளனர். பரிசோதனையில், வயிற்றில் இன்னுமொரு கரு இருந்தது தெரியவந்துள்ளது.

Fetus in fetu என்றழைக்கப்படும் அறிய வகை குறைபாட்டால் இந்த கரு அந்த குழந்தையின் வயிற்றில் உருவாகியிருக்கிறது என்று ரஹ்மானியா மருத்துவ மைய மருத்துவர் தப்ரேஸ் அஜீஸ் விளக்கமளித்தார். அந்த குழந்தைக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டு இப்போது நலமாக இருக்கிறது என்று டாக்டர் தப்ரேஸ் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *