ரஷ்ய ஜனாதிபதி புடின் உயிரிழப்பு உக்ரைன் ஜனாதிபதி அறிவிப்பு!

ரஷ்ய ஜனாதிபதி புடின் ஏற்கனவே இறந்திருக்கலாம் என்ற ரீதியில் பேசியுள்ளார் உக்ரைன் ஜனாதிபதியான வோலோடிமிர் ஜெலன்ஸ்கி.

புடினுக்கு என்ன பிரச்சினை?
நீண்ட நாட்களாகவே புடினுக்கு உடல் நலம் சரியில்லை என்றும், அதனால்தான் அவரது முகம் வீங்கிப்போயிருக்கிறது, கால்கள் நடுங்குகின்றன என்னும் ரீதியில் செய்திகள் வெளிவந்தவண்ணம் உள்ளன.

உண்மையாகவே புடினுக்கு கணையப் புற்றுநோயும் பார்க்கின்சன்ஸ் நோயும் உள்ளன என்பதை நிரூபிக்கும் வகையிலான சில ஆவணங்களும் லீக்காகியுள்ளன.

உக்ரைன் தரப்பில் பலமுறை புடினுக்கு பதிலாக, டூப் போடுபவர்கள் நிகழ்ச்சிகளில் பங்கேற்பதாக கூறப்பட்டுள்ளது. அந்நாட்டு உளவுத்துறைத் தலைவர் புடின் புற்றுநோயால் விரைவில் இறந்துவிடுவார் என்று வேறு இந்த மாதத் துவக்கத்தில் கூறியிருந்தார்.

இந்நிலையில், டாவோஸ் உலகப் பொருளாதார மாநாட்டில் உரையாற்றிய உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கி, ரஷ்யா தரப்பில் யாருடன் பேச்சு வார்த்தை நடத்துவது என்று தெரியவில்லை. தொலைக்காட்சியில் ஸ்பெஷல் எஃபெக்ட் மூலம் புடின் நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதுபோல் காட்டுகிறார்கள் என்று கூறியுள்ளார். 

அவர் உயிருடன் இருக்கிறாரா, முடிவுகளை அவர் எடுக்கிறாரா அல்லது ரஷ்யாவில் முடிவுகளை எடுப்பது யார் என்று எனக்குப் புரியவில்லை என்று கூறியுள்ளார் ஜெலன்ஸ்கி.

ஜெலன்ஸ்கி கூறியுள்ளதற்கு பதிலளித்துள்ள கிரெம்ளின் செய்தித்தொடர்பாளர், ஜெலன்ஸ்கி, எங்கள் தலைவர் புடினும் ரஷ்யாவும் இருக்கக்கூடாது என்று விரும்புகிறார், ஆனால், புடின் உயிருடன் இருக்கிறார், இன்னமும் உயிருடன் இருப்பார் என்று கூறியுள்ளார். 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *