மஹிந்தவும், மைத்திரியும் இணைந்தால் மா மரத்தில்தொங்கி சாவேன் – ரஞ்சித் டி சொய்சா சபதம்!

“ மஹிந்தவும், மைத்திரியும் இணைந்து இடைக்கால அரசு அமைப்பார்களாயின், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் அலுவலகத்துக்கு முன்னால் தூக்கிட்டு தற்கொலை செய்துகொள்வேன்” – என்று கூட்டுஎதிரணி எம்.பியான ரஞ்சித் டி சொய்சா சபதமிட்டுள்ளார்.


இரத்தினபுரி மாவட்டத்தில் நடைபெற்ற மக்கள் கூட்டமொன்றில் பங்கேற்று உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு சபதமெடுத்தார்.

“ 2020 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம்வரை ஆட்சியைக்கவிழ்க்க முடியாது என மஹிந்த அமரவீர ஆருடம் கூறியுள்ளார். ஆனால், அதற்கு முன்னர் நிச்சயம் ஆட்சியைக்கவிழ்ப்போம்.

ஜனாதிபதியாக மைத்திரிபால சிறிசேனவும், பிரதமராக மஹிந்தவும் வருவதற்கு இடைக்கால அரசு வேண்டும் என சிலர் கூறுகின்றனர்.அப்படியொரு நிலை ஏற்படவேக்கூடாது.

அதுமட்டுமல்ல, 2020 இலும் மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதி வேட்பாளராக களமிறங்குவார் என்றும், மஹிந்தவின் ஆதரவை பெற்ற ஒருவர் பிரதமராக களமிறங்குவார் என்றும் கூறப்படுகின்றது. அவ்வாறானதொரு நிலை ஏற்பட்டால், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன அலுவலகத்துக்கு முன்னாலுள்ள மாங்கா மரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொள்வேன்” – என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *