படுக்கையறையில் மொபைல் பாவிப்பவரா நீங்கள்? இனியும் சொந்த காசில் சூனியம் வைக்காதீர்!

படுக்கையறையில் கையடக்கத் தொலைபேசியை பயன்படுத்துவதால், மூளை மற்றும் நுரையீரலுக்கு பாதிப்பு ஏற்படும் என சுகாதார அமைச்சு எச்சரிக்கை விடுத்துள்ளது.

எனவே, உறங்கச்செல்வதற்கு முன்னர், படுக்கையறையில் இருந்து அவ்வாறான பொருட்களை அகற்றுமாறும் அல்லது செயலிழக்க செய்யுமாறும் பாவனையாளர்களை அமைச்சு கேட்டுக்கொண்டுள்ளது.


உலக மனநல தினத்தை முன்னிட்டு சுகாதார மேம்பாட்டு பணியகத்தில் நடைபெற்ற கலந்துரையாடலில் இந்த விடயம் தொடர்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அத்துடன், நீண்டநேரம் கையடக்கத் தொலைபேசியைப் பயன்படுத்துவதும் உடல் பாதுகாப்பிற்கு உகந்ததல்ல அல்ல என்று தேசிய தொற்றுநோய் ஒழிப்புப் பிரிவின் பணிப்பாளர், டொக்டர் பபா பலிஹவடன தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *