ஹேமசிறி, பூஜிதவுக்கு எதிராக குற்றப் புலனாய்வு விசாரணை! – சட்டமா அதிபர் அதிரடி உத்தரவு

உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல்களைத் தடுக்கத் தவறினர் என்ற குற்றச்சாட்டுத் தொடர்பாக முன்னாள் பாதுகாப்புச் செயலர் ஹேமசிறி பெர்னாண்டோ, கட்டாய விடுப்பில் அனுப்பப்பட்டுள்ள பொலிஸ்மா அதிபர் பூஜித ஜயசுந்தர ஆகியோருக்கு எதிராக விசாரணை நடத்தப்படவுள்ளது.

இவர்களுக்கு எதிராக குற்றப் புலனாய்வுத் திணைக்களம் விசாரணை நடத்த வேண்டும் என்று சட்டமா அதிபர் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.

தேவாலயங்களில் இஸ்லாமிய அடிப்படைவாத அமைப்புகள் குண்டுத் தாக்குதலை நடத்தத் திட்டமிட்டுள்ளதாக முன்னரே வழங்கப்பட்ட எச்சரிக்கைகள் விடயத்தில் உயர் அதிகாரிகளாக இருந்த இவர்கள், நடவடிக்கை எடுக்கத் தவறிவிட்டனர் என்று குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

இதன் அடிப்படையில் இவர்கள் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்துக்கு விரைவில் அழைக்கப்பட்டு விசாரணை செய்யப்படவுள்ளனர்.

இவர்கள் மீது குற்றவியல் வழக்குத் தாக்கல் செய்யப்படும் வாய்ப்புகள் இருக்கின்றன எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *