ஐஸ் கியூப்பிலிருந்து வெளிவந்த மணமகள்; பனி சிகரத்தில் நடைபெற்ற பிரமாண்ட திருமணம்

திருமணத்தை பற்றி ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு கனவு இருக்கும். சிலர் தங்களது திருமணம் பிரமாண்டமாகவும், வித்தியாசமாகவும் நடைபெற வேண்டும் என நினைப்பார்கள். சிலர் எளிமையான முறையில் திருமணத்தை நடத்துவார்கள். தற்போது இணையத்தில் வைரலாகி வரும் ஒரு வீடியோவில் பனி சிகரத்தில் நடைபெற்ற பிரமாண்ட திருமண காட்சிகள் பலரை ரசிக்க செய்கிறது.

சுவிட்சர்லாந்தில் உள்ள ஸ்னோ அல்பைன் சிகரங்களில் இந்த திருமணம் நடைபெற்றுள்ளது. 2,222 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள பனி சிகரத்தில் நடைபெற்ற இந்த திருமணத்தின் போது மணமக்கள் ஐஸ்கியூப்பில் இருந்து வெளிப்படும் காட்சிகள் மற்றும் வீடியோவின் பின்னணியில் இசை தொகுப்பு ஆகியவை பயனர்களை கவர்ந்துள்ளது.

மணமக்களின் குடும்பத்தினர் மணமக்களை உற்சாகப்படுத்திய காட்சிகளும் அதில் உள்ளது. இந்த வீடியோ வைரலாகி 24 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விருப்பங்களை குவித்த நிலையில் பயனர்கள் பலரும் தங்களது கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *