ஈரான் எல்லைக்குள் ஏவுகணை தாக்குதல்: தங்கம், கச்சா எண்ணெய் விலை உயர்வு

ஈரானின் எல்லைக்குள் இஸ்ரேல் ஏவுகணை தாக்குதல் நடத்தியுள்ளதால் பதற்றம் மேலும் அதிகரித்துள்ளது.

இத்தாக்குதலை தொடர்ந்து ஏராளமான விமானங்கள் ரத்து செய்யப்பட்டிருப்பதாக ஈரான் அரசு செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதேவேளை உலகளவில் எண்ணெய் மற்றும் தங்கத்தின் விலை உயர்ந்தும், பங்குகளின் விலை வீழ்ச்சியும் அடைந்திருக்கிறது.

ஈரான் எல்லைக்குள் ஏவுகணை தாக்குதல்: தங்கம், கச்சா எண்ணெய் விலை உயர்வு | Iran Isreal War Gold Price Hike

இன்றைய நிலவரப்படி, கச்சா எண்ணெய் வர்த்தகம் சுமார் 1.7 சதவிகிதம் அதிகமாகி ஒரு பீப்பாய் 88 அமெரிக்க டொலர்களுக்கும், தங்கம் ஒரு அவுன்ஸ் 2400 அமெரிக்க டொலர்களுக்கும் விற்பனையானது.

கச்சா எண்ணெயின் விலை அதிகரிப்பு உலகம் முழுவதும் தாக்கத்தை ஏற்படுத்தும், எண்ணெய் விலையின் ஏற்ற இறக்கங்கள் உலக நாடுகளில் விளைவுகளை ஏற்படுத்தக்கூடும்.

உலகின் மொத்த எண்ணெய் விநியோகத்தில் 20 சதவிகிதம் ஹார்முஸ் ஜலசந்தி வழியே நடைபெறுகிறது.

ஈரான் எல்லைக்குள் ஏவுகணை தாக்குதல்: தங்கம், கச்சா எண்ணெய் விலை உயர்வு | Iran Isreal War Gold Price Hike

மத்திய கிழக்கு நாடுகளில் அதிகரிக்கும் பதற்றம் காரணமாக, ஏற்கனவே இப்பகுதியில் கப்பல் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

விலை உயர்வுக்கு, இஸ்ரேல் ஈரான் இடையே போர் மூளும் என்ற அச்சமே என எரிசக்தி சந்தை நிபுணர் வந்தனா ஹரி கருத்து தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *