ஈரானுடன் மோதலை விரும்பவில்லை: அமெரிக்கா அறிவிப்பு

ஈரானுடன் மோதலை விரும்பவில்லை என்று அமெரிக்க பாதுகாப்பு செயலாளர் லாயிட் ஆஸ்டின் தெரிவித்துள்ளார்.

எனினும், இஸ்ரேலின் பாதுகாப்பை உறுதி செய்ய அமெரிக்கா தயங்காது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

கடந்த முதலாம் திகதி சிரியா தலைநகரில் அமைந்துள்ள துணை தூதரகம் மேற்கொள்ளப்பட்ட தாக்குதாலில் ஈரானின் முக்கிய தளபதி உள்ளிட்ட 13 பேர் கொல்லப்பட்டனர்.

இந்த தாக்குதலுக்கு இஸ்ரேலை குற்றம் சுமத்திய ஈரான், இதற்கு தக்க பதிலடி கொடுக்கப்படும் எனவும் தெரிவித்திருந்தது.

இதன்படி, நேற்று இரவு இஸ்ரேல் மீது ஈரான் ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல்களை மேற்கொண்டிருந்தது.

ஈரானின் இந்த தாக்குதலுக்கு உலக வல்லரசு நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்திருந்தது.

இந்தப் பின்னணியிலேயே ஈரானுடன் மோதலை விரும்பவில்லை என அமெரிக்க பாதுகாப்புச் செயலாளர் தெரிவித்துள்ளார்.

ஈரான், ஈராக், சிரியா மற்றும் ஏமன் ஆகிய நாடுகளில் இருந்து இஸ்ரேல் மீது ஏவப்பட்ட டஜன் கணக்கான ட்ரோன்கள் மற்றும் ஏவுகணைகளை அழிக்க அமெரிக்கா ஆதரவு அளித்து வருகின்றது.

ஈரானுடன் மோதலை அமெரிக்கா விரும்பவில்லை என்றாலும், இஸ்ரேலின் பாதுகாப்பை உறுதி செய்ய அமெரிக்கா தயங்குவதில்லை என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *