சென்னை விமான நிலையத்தில் பயணிகள் உடமைகளை சோதனையிட தானியங்கி இயந்திர வசதி அறிமுகம்

சென்னை உள்நாட்டு விமான நிலையத்தில் டெர்மினல் ஒன்றில் இருந்து புறப்படும் இண்டிகோ ஏர்லைன்ஸ் விமான பயணிகளுக்கு, சென்னை விமான நிலையத்தில் தற்போது பாஸ்ட் டிராக் எனப்படும் self package drop (SBD) என்ற புதிய திட்டத்தை செயல்படுத்த தொடங்கியுள்ளனர். இதன் மூலம் இண்டிகோ ஏர்லைன்ஸ் விமான பயணிகள், தங்களுடைய உடமைகளை தாங்களே தானியங்கி இயந்திரங்கள் மூலம் ஸ்கேன் செய்து கன்வேயர் பெல்ட் மூலம் விமானத்திற்கு ஏற்றுவதற்கு அனுப்பி வைக்கலாம்.

இதற்காக சென்னை உள்நாட்டு விமான நிலையத்தில், புறப்பாடு பகுதி டெர்மினல் ஒன்றில் பாதுகாப்பு சோதனை கவுன்டர்கள் 60 முதல் 63 வரையில் தானியங்கி சிறப்பு கவுன்டர்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த கவுன்டர்களில் ஊழியர்கள் யாரும் இருக்க மாட்டார்கள், இயந்திரங்கள் மட்டும் இருக்கும். பயணிகள் அந்த இயந்திரத்தில் தங்களுடைய உடமைகளை வைத்துவிட்டு, தங்களின் பயண டிக்கெட், பிஎன்ஆர் எண்ணை பதிவு செய்ய வேண்டும். உடனடியாக தானியங்கி முறையில் அவர்களுக்கு போர்டிங் பாஸ் வரும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *