சமாதான பேச்சுவார்த்தையை முன்னெடுக்க இஸ்ரேல் இணக்கம்

ஹமாஸ் கிளர்ச்சியாளர்களுடன் மீண்டும் சமாதான பேச்சுவார்த்தையை முன்னெடுக்க இஸ்ரேல் இணக்கம் தெரிவித்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

டோஹா மற்றும் கெய்ரோ நகரங்களில் இந்த கலந்துரையாடலை நடத்த இஸ்ரேல் பிரதமர் Benjamin Netanyahu அனுமதி வழங்கியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன.

இந்த கலந்துரையாடலில் கட்டார் மத்தியஸ்தம் வகிக்கின்றமையும் குறிப்பிடத்தக்கது.

மேலும், காஸா எல்லையில் போர் நிறுத்தத்தை அறிவித்தல் மற்றும் பணயக் கைதிகளை விடுவித்தல் என்பன இந்த கலந்துரையாடலின் பிரதான நோக்கமாக உள்ளது.

ஹமாஸ் அமைப்பினர் கடந்த வாரத்தில் நிலையான போர் நிறுத்தத்திற்கான கோரிக்கையை மீண்டும் முன்வைத்திருந்தனர்.

எனினும், இந்த கோரிக்கையை இஸ்ரேல் நிராகரித்திருந்தது. மேலும், இந்த பேச்சுவார்த்தையை மீள ஆரம்பிப்பதற்கு இஸ்ரேல் தற்போது தயாராகியுள்ளது. ஹமாஸ் அமைப்பினர் இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *