பன்றியின் சிறுநீரகத்தை மனித உடலுக்கு பொருத்தி சாதனை

அமெரிக்காவில், சிறுநீரகங்கள் இரண்டும் செயலிழந்த முதியவர் ஒருவருக்கு பன்றியின் சிறுநீரகம் வெற்றிகரமாக பொருத்தப்பட்டுள்ளது.

குறித்த முதியவருக்கு இரண்டு தடவைகள் சிறுநீரக அறுவை சிகிச்சை மேற்கொண்டும் பயனளிக்காத நிலையில் இறுதியாக பன்றியின் சிறுநீரகத்தை பொருத்துவதற்கு வைத்தியர்கள் மேற்கொண்ட முயற்சிய வெற்றியளித்துள்ளது.

அத்துடன், குறித்த நோயாளரின் உடலில் முன்னேற்றம் காணப்படுவதாக வைத்தியசாலை வட்டாரங்கள் கூறுகின்றன.

இது தொடர்பில் அறுவை சிகிச்சை மேற்கொண்ட வைத்தியர் ,

“பன்றியின் சிறுநீரகம் மனித சிறுநீரகத்தின் அளவை ஒத்ததாக காணப்படும். பன்றியின் இரத்த நாளங்களை நோயாளியின் இரத்த நாளங்களுடன் இணைக்கும் பொழுது, நாங்கள் எதிர்பார்த்தபடி நோயாளியின் உடலிலிருந்து சிறுநீர் பிரிய ஆரம்பித்தது. இது எங்கள் ஆராய்ச்சி குழுவிற்கு கிடைத்த வெற்றி” என்று தெரிவித்துள்ளார்.

மேலும், இந்த முறை வெற்றிபெற்றால், பெரும்பாலான நோயாளர்கள் வெற்றி பெறுவார்கள் எனவும் விலங்குகளின் உறுப்புகளை மனிதனுக்கு மாற்றுதலால் உறுப்பு பற்றாக்குறை குறைவடையும் எனவும் வைத்தியர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *