மாணவர்களுக்கு கல்விக் கடன்களை வழங்குவதற்கு IIHS மற்றும் DFCC கூட்டிணைவு

இலங்கையின் சுகாதாரக் கல்வித் துறையின் முன்னோடியாக திகழும் International Institute of Health sciences (IIHS) நிறுவனம் அதன் மாணவர்களுக்கு 16.5% கவர்ச்சிகரமான வட்டி விகிதத்துடன் மேலும் பல சலுகைகளுடனும் கல்வி கடன் பெறுவதற்கான வசதியை அளிக்கும் வகையில் DFCC வங்கியுடன் கூட்டிணைவொன்றை எட்டியுள்ளது.

ஐக்கிய இராச்சியத்தின் கொவென்ட்ரீ பல்கலைக்கழகத்துடன் இணைந்ததான உயர் கல்வி நிறுவனமான IIHS நிறுவனம் தாதியர் சேவையுடன் தொடர்புடைய கல்வித் தகைமைகளை பெறுவதற்கான வாய்ப்பை வழங்குகிறது.

மேற்படி கூட்டிணைவுக்கான நிகழ்வில் IIHS நிறுவனத்தின் தலைமை நிறைவேற்று அதிகாரி சிறப்பு மருத்துவ நிபுணர் டாக்டர் கித்சிறி எதிரிசிங்கவும் DFCC வங்கியின் வங்கியில் பணவனுப்பல்கள், வர்த்தக அபிவிருத்தி பிரிவைச் சேர்ந்த திரு.அன்டன் ஆறுமுகமும் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *