நவம்பர் மாதம்… ரத்த ஆறு ஓடும்: டொனால்டு ட்ரம்ப் எச்சரிக்கை

நவம்பர் மாதம் முன்னெடுக்கப்படும் ஜனாதிபதி தேர்தல் அமெரிக்க வரலாற்றில் மிக முக்கியமான நாள் என்று குறிப்பிட்டுள்ள டொனால்டு ட்ரம்ப், ரத்த ஆறு ஓடும் என்றும் பகிரங்க எச்சரிக்கை விடுத்துள்ளார்.

குடியரசுக் கட்சி வேட்பாளராக அவர் அறிவிக்கப்படாலம் என்ற நிலையிலேயே, ஜனாதிபதி தேர்தலில் தம்மை தெரிவு செய்யாவிட்டால் அமெரிக்காவில் ரத்த ஆறு ஓடும் என்று டொனால்டு ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

நவம்பர் மாதம்... ரத்த ஆறு ஓடும்: டொனால்டு ட்ரம்ப் பகிரங்க எச்சரிக்கை | Donald Trump Warns Bloodbath Not Elected

ஏற்கனவே கடந்த முறை நாடாளுமன்றத்தில் புகுந்து கலவரத்தை ஏற்படுத்தியவர்கள் அனைவரது தண்டனையும் ரத்து செய்யப்படும் என்றும், அவர்கள் விடுவிக்கப்படுவார்கள் எனவும் அறிவித்திருந்த டொனால்டு ட்ரம்ப், ரத்த ஆறு ஓடும் என்று எதைக் குறிப்பிடுகிறார் என்பதில் தெளிவில்லை என்றே கூறப்படுகிறது.

அமெரிக்க வாகனத் துறைக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக கூறும் கருத்துக்களுக்கு நடுவிலேயே டொனால்டு ட்ரம்ப் ரத்த ஆறு ஓடும் என்றும் குறிப்பிட்டுள்ளார். நவம்பர் மாதம் 5ம் திகதியை நினைவில் நிறுத்துங்கள் என குறிப்பிட்டுள்ள டொனால்டு ட்ரம்ப்,

இது நம் நாட்டின் வரலாற்றில் மிக முக்கியமான திகதியாக இருக்கும் என்று நான் நம்புகிறேன் என்றார். நாட்டின் மிக மோசமான ஜனாதிபதி ஜோ பைடன் என்பதில் எவருக்கும் சந்தேகம் இல்லை என தெரிவித்துள்ள ட்ரம்ப்,

மெக்சிகோவில் கார்களை தயாரித்து அமெரிக்கர்களுக்கு விற்க சீனர்கள் திட்டமிட்டுள்ளனர், தாம் ஜனாதிபதியாக பொறுப்புக்கு வந்தால், அவர்களால் ஒரு வாகனத்தைக் கூட அமெரிக்க மக்களுக்கு விற்பனை செய்ய முடியாமல் போகும் என்றார்.

தாம் ஜனாதிபதியாக தெரிவாகவில்லை என்றால், நாடு மொத்தம் ரத்த ஆறு ஓடும் என்பதில் சந்தேகம் இல்லை என்றும் ட்ரம்ப் குறிப்பிட்டுள்ளார். ஆனால் இந்த கருத்துக்கு ஜோ பைடன் தரப்பு கடும் விமர்சனத்தை முன்வைத்துள்ளதுடன்,

நவம்பர் மாதம்... ரத்த ஆறு ஓடும்: டொனால்டு ட்ரம்ப் பகிரங்க எச்சரிக்கை | Donald Trump Warns Bloodbath Not Elected

ஜனவரி 6 போன்ற இன்னொரு கலவரத்தை அமெரிக்க மண்ணில் நடத்த டொனால்டு ட்ரம்ப் திட்டமிடுகிறார் என்று கண்டனம் தெரிவித்துள்ளனர். மட்டுமின்றி, அமெரிக்க மக்கள் இந்த நவம்பரில் அவருக்கு மற்றொரு தேர்தல் தோல்வியைக் கொடுக்கப் போகிறார்கள்,

அவரது தீவிரவாத போக்கு, வன்முறையின் மீதான அவரது நாட்டம், பழிவாங்கும் குணத்தையும் மக்கள் நிராகரிக்கவே செய்வார்கள் என்றும் ஜோ பைடன் தரப்பு தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *