இரவில் உடற்பயிற்சி செய்தால் மன அழுத்தம் குறையும்!

மனஅழுத்தம் குறைய -இன்று பலரும் உடற்பயிற்சி செய்வதில் ஆர்வம் காட்டி வருகின்றனர் ,காரணம் உடல் எடை அதிகரிப்பு மற்றும் ஆரோக்கியத்தை பேணி காக்க வேண்டும் என்பதற்காக செய்கின்றனர். ஆனால் ஒரு சிலருக்கு என்னதான் உடற்பயிற்சி செய்தாலும் உடல் எடை குறையாமலே இருக்கும் அதற்கான தீர்வை ஒரு ஆராய்ச்சி என்ன கூறியுள்ளது என்பதை இப்பதிவில் தெரிந்து கொள்வோம்.

உடல் எடை குறைப்பு :

பொதுவாக காலை மாலை என இரு நேரத்திலுமே உடற்பயிற்சி செய்வீர்கள் ஆனால் எந்த நேரத்தில் உடற்பயிற்சி செய்தால் என்ன பலன் கிடைக்கும் என்பது தெரியுமா? ஒரு ஆராய்ச்சியின் படி உடல் எடை குறைக்க நினைப்பவர்கள் காலை ஏழு- எட்டு மணிக்கு உடற்பயிற்சியை செய்து முடித்து விடவும் .ஏனென்றால் அந்த நேரத்தில் ஹார்மோனில் மாற்றம் நிகழும். இந்த நேரத்தை பயன்படுத்தி நாம் உடற்பயிற்சி செய்யும் போது உடல் எடை குறைக்கும் நிகழ்வு நடக்கும்.

உடல் எடை அதிகரிப்பு:

உடல் எடை அதிகரிக்க நினைப்பவர்கள் மதிய வேலைகளில் அதாவது 3-4 இந்த நேரத்தில் உடற்பயிற்சிகளை செய்யலாம், ஏனென்றால் இந்த நேரத்தில் டெஸ்டோஸ்டெரோன் என்ற ஹார்மோன் சுரக்கும். இது தசை வலி வலுப்பெற உதவுகிறது.

மன அழுத்தம் குறைய

இரவு வேலைகளில் ஏழு – ஒன்பது இந்த நேரத்தில் கார்டிசோல் என்று சொல்லக்கூடிய ஹார்மோன் அதிகமாகும். இது டிரஸ் ஹார்மோன் எனவும் கூறப்படுகிறது. இரவு நேரத்தில் நாம் உடற்பயிற்சி மேற்கொள்ளும் போது மன அழுத்தம் குறையும் என கூறப்படுகிறது.

எனவே இதில் உங்களுக்கு என்ன தேவை உள்ளதோ அதற்கேற்ப நேரத்தில் உடற்பயிற்சி செய்து பயன் பெறுங்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *