ராஜபக்சாக்களின் இறுதித் தேர்தல்?

இது ராஜபக்ஷக்களின் இறுதித் தேர்தலாக இருக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேசிய மக்கள் சக்தியின் மத்திய குழு உறுப்பினர் இராமலிங்கம் சந்திரசேகர் இதனை தெரிவித்துள்ளார்.

சமகால நிலைமை தொடர்பாக யாழில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவித்த போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்?

பசில் ராஜபக்ஷவை வரவேற்பதற்காக அனைவரும் விமான நிலையம் சென்றுள்ளனர். தமது அரசாங்கம் தோல்வியுற்றதை அறிந்து, நாட்டை விட்டு ஓடியவர் இந்த பசில் ராஜபக்ச.

இவர்கள் வருகையால் எமது நாட்டுக்கு ஒன்றும் ஆகப் போவதில்லை. எமது நாட்டினை நாசமாக்கியவர்கள்.இதை நான் கூறவில்லை உயர் நீதிமன்றம் கூறியது. இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிக்கு ராஜபக்ச குடும்பமே காரணம்.

இது ராஜபக்சாகளின் இறுதித் தேர்தல் ஆக இருக்கலாம். மேலும் ரணில் விக்கிரமசிங்க அவர்களுக்கும் இறுதி தேர்தல் மட்டுமல்ல சாவு மணியும் கூட. இவர்கள் எதிர்காலத்தில் மக்களால் விரட்டி அடிக்கப்படுவார்கள்.

இவர்கள் எமது நாட்டில் இனவாதத்தைத் தூண்டி கடன் பொறிக்குள் தள்ளியுள்ளனர். அரசியலில் இருந்து விரட்டி அடிக்கப்பட வேண்டிய இவர்களுக்கு எமது மக்கள் இனிவரும் தேர்தலில் நல்ல பாடம் புகட்டுவார்கள். அதனை தேசிய மக்கள் சக்தி செய்யும்” இவ்வாறு இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *