கப்ருக்க ‘Partner Central’ டிஜிட்டல் வணிக தளம் திறந்து வைப்பு
இலங்கையின் e-commerce துறையில் முன்னணி நாமமாக திகழும் உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் பெரும் வரவேற்பை பெற்றுள்ள Kapruka.com, online shopping மற்றும் e-commerce துறையில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தும் வகையில் ‘Kapruka Partner Central’ திட்டம் கொழும்பு தாமரை கோபுர வளாகத்தில் அண்மையில் ஆரம்பிக்ககப்பட்டுள்ளது.
பங்குதாரர் தரப்புகளை வலுவூட்டி அவர்களுக்கு கூடுதல் வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுக்கும் நோக்கத்துடன் ஆரம்பிக்கப்பட்டுள்ள மேற்படி புதிய திட்டம் டிஜிடடல் வர்த்தக கொடுக்கல் வாங்கல் துறையில் புதியதொரு அத்தியாயத்தின் தொடக்கமாகும். பங்குதாரர் தரப்புகளுக்கு தமது உற்பத்திகளை காட்சிப்படுத்துவதற்கும் உலகெங்கிலும் உள்ள வாடிக்கையாளர்களுடன் இணைவதற்கும் மேம்படுத்தப்பட்ட டிஜிட்டல் வணிகத் தளமொன்றை உருவாக்குவதே Partner-Central அடிப்படை நோக்கமாகும்.
துல்லியமான திட்டமிடல், புத்தாக்க மற்றும் அர்ப்பணிப்புமிக்க சேவை ஆகிய பண்புகள் இதன் தனித்துவமான அம்சங்களாகும். இதன் பாவனைக்கு இலகுவான, எளிமையான இடைமுகம் (Interface) மற்றும் மகத்தான பல்வேறு சிறப்பம்சங்கள் காரணமாக பங்குதாரர் தரப்புகளை online சந்தையுடன் இணைப்பதற்கான செயன்முறை கவர்ச்சியானதும் புரட்சிகரமானதுமான தன்மையை கொண்டுள்ளது.
Partner-Central இன் தனித்துவமான அம்சம் யாதெனில், விற்பனையாளர்களுக்கு தமது பயண வழியில் சகல கட்டங்களையும் வலுவூட்டக்கூடிய தனித்துவமான சாதனங்களையும் வசதிகளையும் வழங்குவதாகும். உற்பத்திகளை முறைசார்ந்ததாக பட்டியலிடும் செயற்பாட்டிலிருந்து சிக்கலான பகுப்பாய்வுகள் உள்ளிட்ட செயலாற்றுகை தர நியமங்கள் வரைக்கும் Partner-Central இல் பல்வேறு வசதிகளும் பண்புகளும் காணப்படுவதால் பங்குதாரர் தரப்புகளுக்கு e-commerce துறையில் போட்டித்தன்மையுடன் இயங்க முடியும்.
“பரந்துபட்ட சந்தைப்படுத்தல் மற்றும் ஊக்குவிப்பு வாய்ப்புகளை உருவாக்கி பங்குதாரர்களை வலுவூட்டும் நோக்கத்துடன் பரிபூரண செயற்பாட்டு e-commerce சூழலொன்றை உருவாக்குவதற்கு Partner-Central அர்ப்பணிப்புடன் செயற்படுகின்றது. இதன் மூலம் எந்த மட்டத்திலான விற்பனையாளருக்கும் தமது முழுமையான ஆற்றலின் மூலம் வாய்ப்புகளை ஏற்படுத்தி சம மட்டத்திலான போட்டி சந்தையொன்றுக்கு பிரவேசிப்பதற்கான வாய்ப்பு கிடைக்கிறது.
தொழில்நுட்பத்தின் மகிமையினால் எவருக்கும் தமது கனவுகளை நோக்கி பயணிப்பதற்கு முடிவில்லா வாய்ப்புகள் உருவாகின்றன.” என Kapruka.com ஸ்தாபகரும் தலைவருமான தொழில் அதிபர் திரு துலித் ஹேரத் தெரிவித்தார்.
வணிக உலகின் எதிர்காலத்தை வடிவமைக்கும் டிஜிட்டல் யுகத்தில் நம் முன்னால் கொட்டிக் கிடக்கும் ஆற்றல்களை அடையாளங் கண்டு சர்வதேச மட்டத்திலான தமது வர்த்தகநாமங்களின் இருப்பை உறுதிப்படுத்திக் கொள்வதற்கும் மேம்படுத்திக் கொள்வதற்கும் Partner Central உடன் இணைந்துகொள்ளுமாறு சகல துறைகளிலுமுள்ள பங்குதாரர் தரப்புகளுக்கு Kapruka அழைப்பு விடுத்துள்ளது.