ஆனந்த் அம்பானி திருமண நிகழ்ச்சியில் குத்தாட்டம் போட்ட ஷாருக்கான்

ஆனந்த் அம்பானியின் திருமணத்திற்கு முந்தைய கொண்டாட்டத்தில் பங்கேற்று ஷாரூக்கான் நடனமாடிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

முகேஷ் அம்பானியின் இளைய மகனான ஆனந்த் அம்பானிக்கு, தொழிலதிபர் வீரேன் மெர்சென்ட்டின் மகள் ராதிகா மெர்சென்டிற்கும் வருகின்றன ஜூலை 12-ம் திகதி திருமணம் நடைபெறவுள்ளது.

இவர்களின் திருமணத்திற்கு முந்தைய கொண்டாட்டம் நேற்று பிரமாண்டமாக தொடங்கியது.

ஆனந்த் அம்பானி திருமணம்: நிகழ்ச்சியில் குத்தாட்டம் போட்ட ஷாருக்கான் (வீடியோ) | Anant Ambani Pre Wedding Shahrukh Khan Dance Viral

இந்த விழாவில் பங்கேற்பதற்காக ஃபேஸ்புக் நிறுவனர் மார்க் ஷூக்கர்பெர்க், பில்கேட்ஸ், பாடகி ரிஹானா பங்கேற்றனர்.

திரைபிரபலங்கள் ஷாரூக்கான், சல்மான்கான், அக்ஷய் குமார், ரன்பீர் கபூர், ரன்வீர் சிங், வருண் தவான், இயக்குனர் அட்லீ கலந்து கொண்டனர்.

மேலும், கிரிக்கெட் வீரர்கள் சச்சின் டெண்டுல்கர், தோனி, ஹர்திக் பாண்ட்யா, ரோஹித் சர்மா, கிரோன் பொலார்டு என ஏராளமானோர் பங்கேற்றுள்ளனர்.

முதல் நாள் கொண்டாட்டம் நேற்று உற்சாகத்துடன் நடந்து முடிந்துள்ளது. நேற்று நடந்த கொண்டாட்டத்தில் சர்வதேச புகழ் பெற்ற பாப் பாடகி ரிஹானாவின் கலைநிகழ்ச்சிகள் நல்ல வரவேற்பை பெற்றது.

அவருடன் ஷாரூக்கான், ரன்வீர் சிங், வருண் தவான் உள்ளிட்டோரும் கலை நிகழ்ச்சியில் பங்கேற்றனர். இதற்கிடையே ஷாரூக்கான் நடனமாடும் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *