Bachelor of Business Administration பட்டப்படிப்பு பாடநெறியை அறிமுகப்படுத்தும் IIHS நிறுவனம்

நீண்ட காலமாக இலங்கையின் சுகாதாரக் கல்வித் துறையின் முன்னோடியாக திகழும் International Institute of Health Sciences (IIHS) நிறுவனம் புதிதாக Bachelor of Business Administration (BBA) பட்டப்படிப்பு பாடநெறியை அறிமுகப்படுத்தியுள்ளது. பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவினதும் அங்கீகாரத்துடன் கூடிய மேற்படி பாடநெறி ஊடாக சுகாதாரக் கல்வி நிறுவனமொன்றின் தனித்துவமான நிபுணத்துவத்தையும் பெற்றவாறு வர்த்தக நிர்வாகத் துறையின் தகைமைகளை பூர்த்தி செய்துக்கொள்வதற்கான வாய்ப்பு மாணவர்களுக்கு கிடைக்கின்றது. ஆராய்ச்சிகள் மற்றும் உள்ளக பயிற்சிக்கு கூடுதல் கவனம் செலுத்தும் வகையில் 120 Credits கொண்ட பரந்தளவிலான பாடவிதானங்களை கொண்ட இப் பாடநெறி ஊடாக வர்த்தக உலகில் காணக்கூடிய சவால்களை வெற்றிகரமாக எதிர்கொள்வதற்கு தேவையான அறிவையும் அனுபவத்தையும் மாணவர்களுக்கு அளிப்பதற்கு IIHS நிறுவனம் நடவடிக்கை எடுத்துள்ளது.

இவ்வாறான பல்வகை கல்வி பாடநெறிகளை அறிமுகப்படுத்துவதன் மூலம் ஒன்றுக்கொன்று மாறுபட்ட துறைகளுக்கு பிரவேசிப்பதற்கு தேவையான அறிவையும் ஆற்றலையும் கொண்ட மாணவர்களை உருவாக்குவதே IIHS நிறுவனத்தின் எதிர்பார்ப்பாகும்.

இப் பாடநெறி சிறப்பு மருத்துவ நிபுணர் கித்சிறி எதிரிசிங்க அவர்களின் தலைமையில் முன்னெடுக்கப்படுகின்றது. சுகாதாரத் துறை தொடர்பாக அவருக்குள்ள பரந்தளவிலான அறிவு மற்றும் அனுபவத்துடன் ஒழுக்கநெறிகள், சமூகப் பொறுப்பு மற்றும் புத்தாக்கம் போன்ற விடயங்கள் தொடர்பாக கூடுதல் கவனம் செலுத்தப்பட்டு இப் பாடநெறியை முன்னெடுக்க முடியுமென IIHS நிறுவனம் தெரிவித்துள்ளது.

“பல்வேறு துறைகள் மீது ஆற்றல்களை வெளிப்படுத்தும் ஒருவரை சமூகத்துக்கு கொடுக்க முடிந்தால் அதுவே சமூகத்துக்கு நாம் செய்யக்கூடிய மிகப் பெரிய சேவை ஆகும். பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு அங்கீகரித்துள்ள இப் பாடநெறியை அறிமுகப்படுத்துவதன் மூலம் பலருக்கும் வர்த்தக உலகுக்கு பிரவேசிப்பதற்கான வாய்ப்பினை ஏற்படுத்த முடியும். அனுபவமிக்க தொழில் வல்லுநர்களினதும் ஒத்துழைப்புடன் மாணவர்களுக்கு உள்ளக பயிற்சி, ஆலோசனை மற்றும் செய்முறை கற்பித்தல் வாய்ப்புகளை வழங்கவும் நாம் நடவடிக்கை எடுத்துள்ளோம்.” என டாக்டர் எதிரிசிங்க தெரிவித்தார்.

இப் பட்டப்படிப்பு பாடநெறிக்கு மாணவர்களை சேர்த்துக்கொள்ளும் நடவடிக்கைகள் தற்பொழுது இடம்பெற்று வருவதோடு, IIHS நிறுவனத்தின் இணையதளத்துக்கு பிரவேசிப்பதன் மூலமாகவோ அல்லது அதன் ஆட்சேர்ப்பு திணைக்களத்தை தொடர்பு கொள்வதன் மூலமாகவோ தேவையான தகவல்களை பெற்றுக்கொள்ள முடியும். மட்டுப்படுத்தப்பட்ட எண்ணிக்கையிலான மாணவர்களே பாடநெறிக்கு சேர்த்துக்கொள்ளப்படுவதால் பாடநெறியை கற்க விரும்புவோர் உடனடியாக பதிவு செய்வது பொருத்தமாகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *