நாள் முழுவதும் வேலை…ஆனால், 50 ரூபாய்தான் சம்பளம்

எல்லா நாட்டு மக்களும் ஏதோ ஒரு வகையில் வறுமையை சந்தித்திருப்பார்கள். அந்த வகையில் உலகில் மிக ஏழ்மையான நாடுகள் வரிசையில் கிழக்கு ஆபிரிக்காவில் உள்ள புருண்டி முதலிடத்தில் உள்ளது.

சுமார் 1 கோடியே 20 இலட்சம் பேர் வாழும் இந்த நாட்டில் 85 சதவீதமான மக்கள் வறுமையின் பிடியில் சிக்கித் தவிக்கின்றனர்.

இந்த நாட்டு மக்களின் வாழ்வாதாரமாக விவசாயம் உள்ளது.

Oruvan

Poorest Country Burundi

கடந்த 1996 முதல் 2005ஆம் ஆண்டுவரையில் புருண்டியில் ஏற்பட்ட மிகப்பெரிய இனக்கலவரம் மில்லியன் கணக்கான உயிர்களைக் கொன்றதோடு அந்த நாட்டின் பொருளாதாரத்தையும் நாசமாக்கியது.

இந்நாட்டு மக்களின் ஆண்டு வருமானம் 180 டொலர்கள் தான். அதாவது வருடத்துக்கு 14ஆயிரம் ரூபாய்தான். இந்த நாட்டில் நாள் முழுவதும் வேலை செய்தாலும் 50 ரூபாய் கூட சம்பாதிக்க முடியாத நிலைதான் காணப்படுகிறது.

முன்னேற்றத்துக்காக பல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டாலும் தற்போது வரையில் புருண்டி உள்ளிட்ட நாடுகளின் நிலை இன்று வரையில் முன்னேற்றமடையாமல் இருப்பதுதான் உண்மை.

Oruvan

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *