குளோனிங் முறையில் உருவாக்கப்பட்ட முதலாவது ஆட்டுக்குட்டி!

சீனாவில் முதல் முறையாக உயிரணு குளோனிங் முறையில் உருவாக்கப்பட்ட 2 ஆட்டுக் குட்டிகள் பிறந்துள்ளன.

சீனாவின் ஜிங் ஹாய் மாநிலத்தில் இந்த ஆட்டுக் குட்டிகள் பிறந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

அத்துடன், சீனாவின் நோர்த்வெஸ்ட் ஏ&எப் பல்கழைக்கழகத்தின் விஞ்ஞானிகள் குழுவால் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

உயிரணு குளோனிங் முறை

சீனாவில் முதன்முறையாக உயிரணு குளோனிங் முறையில் பிறந்த ஆட்டுக் குட்டிகள் இவையாகும்.

சீனாவில் குளோனிங் முறையில் உருவாக்கப்பட்ட முதலாவது ஆட்டுக்குட்டி! | China First Ever Cloned Goats Science Experiment

பிறந்த முதலாவது ஆட்டுக் குட்டி, 3.4 கிலோ எடையுடன் ஆரோக்கியமாக உள்ளதென இந்த குளோனிங் முறையில் ஈடுபட்ட விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

ஆராய்ச்சி நடவடிக்கைகள்

உயிரணு குளோனிங் முறையில் தற்போது மேற்கொள்ளப்படும் ஆராய்ச்சிகள் தொடர்பான மேலதிக விடயங்களை வெளியிட முடியாதென அவர் குறிப்பிட்டுள்ளார்.

 

இந்த ஆட்டுக் குட்டிகளை உருவாக்க பயன்படுத்தப்பட்ட உயிரணு குளோனிங் முறை, கடந்த காலங்களில் நாய், முயல், பசு, பன்றி உள்ளிட்ட பல மிருகங்களை உருவாக்க பயன்படுத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

GalleryGallery

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *