இந்திய ரூபாயில் வர்த்தகம் டொலரை கட்டுப்படுத்த இலங்கை திட்டம்!

இலங்கையில் அமெரிக்க டொலர் சார்ந்த் பொருளாதாரத்தை குறைப்பதற்கான நகர்வுகளில் அரசாங்கம் ஈடுபட்டுள்ளது.

அதற்கான இலங்கையின் பிரதான வர்த்தக பங்காளியாக உள்ள இந்தியாவுடன் வர்த்தக உறவுகளை விரிவுபடுத்தும் நோக்கில் அரசாங்கம் செயல்படுவதாக அறிவித்துள்ளது.

இலங்கையில் UPI (Unified Payments Interface) இந்த முறை அறிமுகத்தின் மூலம் இந்தியர்கள் இந்திய ரூபாவில் இலத்திரனியல் பரிவர்த்தனை செய்யும் வசதி கடந்த 12ஆம் திகதிமுதல் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

தமிழ்நாடு, மும்பாயுடனான வர்த்தகம் வரிவடையும்

இந்திய பிரதமர் மோடி இந்த முறையை அறிமுகப்படுத்தியதுடன், இந்தியர்களை இலங்கைக்கு செல்லும் கோரிக்கையையும் முன்வைத்திருந்தார்.

NNPCI International Payments Limited மற்றும் இலங்கை LankaPay நிறுவனம் என்பன இணைந்து முன்னெடுக்கும் இந்த வேலைத்திட்டத்தை விரைவாக விஸ்தரிக்கும் நோக்கத்துடன் 10,000 வர்த்தக நிலையங்களில் இந்த கட்டண முறை நடைமுறைப்படுத்தப்படுகிறது.

இந்த வசதியை மேலும் விரிவுபடுத்த உள்ள இலங்கை எதிர்வரும் மார்ச் மாத்திற்குள் 65,000 வர்த்தக நிலையங்களில் இந்தக் கட்டண முறையை அறிமுகப்படுத்த உள்ளது.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கடந்த ஆண்டு இந்தியாவுக்கு மேற்கொண்டிருந்த அதிகாரப்பூர்வ பயணத்தின் போது இத்திட்டத்தை அறிமுகப்படுத்துவதற்கான இணக்கப்பாடுகள் எட்டப்பட்டிருந்தன.

யு.பி.ஐ முறை மூலம் இந்தியாவின் தமிழ்நாடு மற்றும் மும்பையுடன் இலங்கை இணைக்கப்படும் எனவும் இதன் மூலம் இலங்கையில் உள்ள சுமார் 400,000 வர்த்தகர்கள் பயனடைவார்கள் எனவும் ரணில் விக்ரமசிங்க தெரிவித்திருந்தார்.

சீனா வர்த்தக நண்பன் மாத்திரமே

இந்த நிலையில் இந்தியாவுக்கு அதிகாரப்பூர்வ பயணம் மேற்கொண்டுள்ள வெளிவிவகார இராஜாங்க அமைச்சர் தாரக பாலசூரிய இந்திய ஊடகமொன்று கருத்து வெளியிடுகையில்,

Oruvan

‘‘இலங்கை இந்தியாவை சகோதரனாகவும் பங்காளியாகவும் பார்க்கிறது.

2047ஆம் ஆண்டுக்குள் இந்தியா எப்படி வளர்ந்த நாடாக மாறும் என்பதைப் பார்க்க வேண்டியது அவசியம்.

இந்திய நிறுவனங்களை இலங்கையில் முதலீடுகளை மேற்கொள்ளுமாறு அழைப்பு விடுத்துள்ளோம். 2048ஆம் ஆண்டுக்குள் இலங்கையும் அபிவிருத்தியடைந்த நாடாக மாறும்.

இலங்கையும் சீனாவும் நண்பர்கள். ஆனால், இந்தியாவைப் பொறுத்தவரை இது ஒரு “நாகரிக இணைப்பு”. கலாச்சாரங்கள் மற்றும் வரலாற்று ரீதியாக எமது தொடர்பு உள்ளது.

நீங்கள் புத்தகங்களைப் படித்தால், இலங்கை மக்கள் இந்தியாவில் இருந்து வந்தவர்கள் என்பது உங்களுக்குத் தெரியும். இலங்கை ஒரு பௌத்த நாடு, பௌத்தம் இந்தியாவில் இருந்து வந்தது.

சீனா இலங்கையின் ஒரு முக்கியமான வர்த்தக பங்காளியாக உள்ளது. ஏனைய நாடுகளும் அவ்வாறுதான்.

இந்தியா-இலங்கை உறவு மற்றும் UPI அறிமுகம் குறித்து கருத்து வெளியிட்ட தாரக பாலசூரிய,

இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான உறவு எப்போதும் இல்லாத அளவுக்கு வலுவடைந்துள்ளது. UPI இரு நாடுகளுக்கும் நன்மை பயக்கும்.

UPI பயணம் செய்வதை இலகுப்படுத்தும்

இலங்கையில் கடந்த 2022ஆம் ஆண்டு ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியின் போது பாரிய அந்நிய செலாவணி பற்றாக்குறையை எதிர்கொண்டோம். முக்கியமாக டொலர் பற்றாக்குறையை எதிர்கொள்ள நேரிட்டது.

இதனால் டொலரை சார்ந்து இருப்பதை குறைக்க நடவடிக்கைகள் எடுக்க வேண்டியுள்ளது.

இந்தியா – இலங்கைக்கு இடையிலான வர்த்தகம் இந்திய ரூபாயில் மேலும் விரிவடையும் போது டொலரை சார்ந்திருப்பது குறைவடையும்.

UPI அறிமுகத்தின் மூலம் இந்தியர்கள் இலங்கைக்கு பயணம் செய்வது மிகவும் எளிதாகிறது. இந்திய ரூபாயில் அவர்கள் எங்கு வேண்டுமானாலும் பணம் செலுத்தலாம்.‘‘ என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *