உலகில் நான்காவது பெரிய கடலை காணவில்லை : அதிர்ச்சியில் ஆய்வாளர்கள்

உலகில் நான்காவது கடல் மாயமானமை தொடர்பில் ஆய்வாளர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

கஜகஸ்தானுக்கும், உஸ்பெகிஸ்தானுக்கும் இடையே அமைந்துள்ள ‘ஆரல்’ எனும் கடல் பகுதியே முழுமையாக வற்றி காணாமல் போயுள்ளது.

ஆறுகள் திசைமாறிய பிறகு

68 ஆயிரம் சதுர கிலோ மீட்டர் பரப்பளவை கொண்ட இந்த கடல் 1960-ல் சோவியத் நீர்ப்பாசனத் திட்டங்களால் ஆறுகள் திசைமாறிய பிறகு சுருங்கத் தொடங்கியது.

உலகில் நான்காவது பெரிய கடலை காணவில்லை : அதிர்ச்சியில் உறைந்து போயுள்ள ஆய்வாளர்கள் | Fourth Largest Ocean In The World Is Missing

1960-ல் சோவியத் யூனியன் கஜகஸ்தான், உஸ்பெகிஸ்தான் மற்றும் துர்க்மெனிஸ்தான் ஆகிய வறண்ட சமவெளிகளில் நீர்ப்பாசன நோக்கத்திற்காக ஆற்றுத்தண்ணீர் திசை திருப்பப்பட்டது. இப்பகுதியின் 2 பெரிய ஆறுகளான வடக்கில் சிர்தர்யா மற்றும் தெற்கில் அமுதர்யா ஆறுகள் பாலைவன பகுதியில் பருத்தி மற்றும் பிற பயிர்கள் உற்பத்தி செய்வதற்காக திசைதிருப்பி விடப்பட்டன.

இதனால் ஆரல் கடல் வற்ற தொடங்கியது. ஆறுகளின் தண்ணீரைத் திருப்பி பாலைவனத்தை விளைநிலமாக உருவாக்கிய பிறகு, நீர்வரத்து வெகுவாகக் குறைந்து கடல் முழுவதும் ஆவியாகிவிட்டது.

கடந்த 50 ஆண்டுகளில் ஆரல் கடல் முழுவதும் வற்றி காணாமல் போய் நிலம் போல் மாறிவிட்டதாக கூறப்படுகின்றமை ஆய்வாளர்களிடையே பாரிய அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *