ஆசியக் கண்டத்தில் குறைந்த ஊதியம் வழங்கும் இலங்கை

CEO world சஞ்சிகை வௌியிட்டுள்ள உலகில் குறைந்த சராசரி சம்பளம் பற்றிய பட்டியலில் இலங்கைக்கு கடைசி இடம் கிடைத்துள்ளது.

இந்த ஆய்வில் 105 நாடுகள் குறித்து தகவல்கள் எடுக்கப்பட்டன. இதிலே இலங்கை 105 ஆவது இடத்தைப் பெற்றுக் கொண்டுள்ளது.

அத்துடன் ஆசியக் கண்டத்தில் ஏனைய நாடுகளை விட மிகவும் குறைந்த ஊதியம் கொண்ட நாடாகவும் இலங்கை (US$ 143.46) பெயரிடப்பட்டுள்ளது.

சர்வதேச மட்டத்தில் சுவிட்சர்லாந்து கூடுதல் ஊதியம் வழங்கும் நாடாகவும் ( US$6142.1 ) ஆசியக் கண்டத்தில் சிங்கப்பூர் அதிகூடிய ஊதியம் வழங்கும் நாடாகவும் (US$4350.79) பட்டியலிடப்பட்டுள்ளது.

அதே போன்று இந்தப் பட்டியில் இந்தியாவும் (US$718.38) கூட மிகவும் பின்தங்கியே காணப்படுகின்றது.

அதே நேரம் சர்வதேச ரீதியாக 104 நாடுகளை கொண்டு நடத்தப்பட்ட பலம்வாய்ந்த கடவுச்சீட்டைக் கொண்ட நாடுகளின் வரிசையில் இலங்கை 96வது இடத்தையே பெற்றுக் கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *