பூமிக்கு இரகசியமாக வந்து சென்ற வேற்றுகிரகவாசிகள் விமானம்! விஞ்ஞானிகள் உறுதி!!

இரகசியமாக பூமிக்கு வந்து சென்றது வேற்றுகிரகவாசிகள் விமானம் தான் என விஞ்ஞானிகள் 95 சதவீதம் உறுதியாக கூறியுள்ளனர்.

கடந்த 2017ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் தொடக்கத்தில் பூமிக்கு அருகில்  வித்தியாசமான விண்கல் ஒன்று வந்தது. பார்ப்பதற்கு சிகரெட் வடிவில் இருக்கும் இந்த விண்கல் விஞ்ஞானிகளின் கவனத்தை ஈர்த்தது.
உலகிலேயே முதல் முறையாக பூமிக்கு சொந்தம் இல்லாமல் வானத்தில் பறந்த முதல் பொருள் இதுதான்.
இது மற்ற கற்களை போலவோ எரிநட்சத்திரம் போலவோ இல்லாமல் பறக்கும் பொருள் போல இருந்தது. இதனால் விஞ்ஞானிகள் இது விண்கல்லா, எரி நட்சத்திரமா, இல்லை வேறு எதுவுமா என்று தெரியாமல் இருந்தனர்.
அதுமட்டுமின்றி அதில் இருந்து, சிறிய சிறிய சிக்னல்களும் வந்து கொண்டு இருந்ததால், வித்தியாசமானதாகவும் காணப்பட்டது. இதனால் விஞ்ஞானிகள் அதற்கு உடனடியாக ஒமுவா முவா என்று பெயர் வைத்தார்கள்.
இதன் அர்த்தம் ‘வெளி உலகில் இருந்து வந்த தூதுவன் என்று அர்த்தம். இது பூமிக்கு மிக அருகில் வந்துவிட்டு சென்றது. அதன்பின் சூரியனை நோக்கி சென்றுவிட்டு, பின் சூரியனை கடந்து வேறு வழியாக சென்றுவிட்டது.
அது எந்த கிரகம் மற்றும் நட்சத்திரத்தின் ஈர்ப்பு விசையிலும் சிக்காமல் மிக நேர்த்தியாக சாதாரணமாக கடந்து சென்றது. ஆனால் இப்போது இது எங்கிருக்கிறது என்பது தெரியவில்லை.
இதனால் இது என்ன என்பதை அறிவதற்காக ரஷ்ய தொழிலதிபர் ஒருவர் 650 கோடி ரூபாய் பணம் கொடுத்து ஆராய்ச்சி நடத்தி வருகிறார்.
ரஷ்யா மட்டுமில்லாமல் மற்ற நாடுகளை சேர்ந்த விஞ்ஞானிகளும் ஆராய்ச்சி நடத்தி வருகிறார்கள். அது பார்ப்பதற்கே வித்தியாசமாக இருந்ததால், இது வேற்றுகிரக விமானமாக இருக்கலாமோ என்ற சந்தேகமும் எழுந்தது.
இப்படி விஞ்ஞானிகள் தொடர்ந்து ஆராய்ச்சி நடத்தி கொண்டிருந்தனர். இந்த ஆராய்ச்சிகளில் ஹார்வேர்ட் நடத்திய ஆராய்ச்சி ஒன்றில் திருப்பம் ஏற்பட்டு இருக்கிறது.
ஹார்வேர்ட் பல்கலைக்கழகத்தை சேர்ந்த ஷுமேல் பெய்லி தலைமையில் நடத்த ஆராய்ச்சியில், இந்த சாதனம் கண்டிப்பாக 95 சதவிகிதம் வேற்றுகிரக  விமானம்தான்.
இதை உலகம் ஏற்றுக்கொள்ளும் நாள் விரைவில் வரும்.  ஆனால் இது ஏன் பூமியை நோக்கி வந்தது என்பதைத்தான் விரைவில் நாம் கண்டுபிடிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் வேற்றுகிரக விமானம் இங்கு ஏன் வர வேண்டும்? ஏற்கனவே வேற்றுகிரகவாசிகள் குறித்து பல செய்திகள் வரும் நிலையில், அந்த விமானம் பூமியில் இருக்கும் மக்களை நோட்டமிட வந்ததா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *