இலங்கை பிரஜை ஒருவர் வெளிநாடுகளுக்கு செலுத்த வேண்டிய கடன்

இலங்கை பிரஜைகளாகிய ஒவ்வொருவரும் வெளிநாடுகளுக்கு 12 இலட்சம் ரூபாவிற்கும் அதிகமாக கடன்பட்டுள்ளனர் என பேராதனை பல்கலைக்கழகத்தின் பொருளாதார பிரிவின் பேராசிரியர் வசந்த அத்துகோரள தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நடந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட போது அதன் தலைவர் டானியா அபேசுந்தர இதனை தெரிவித்துள்ளார்.

கடந்த வருடம் ஒக்டோபர் மாத இறுதிக்குள் இலங்கை அரசாங்கம் வெளிநாடுகளுக்கு 28,095 பில்லியன் ரூபா கடனை செலுத்தாமல் மிகுதி வைத்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அரசாங்கத்தின் வருமானம் அதிகரிப்பு

இந்த நிலையில், கடந்த ஜனவரி மாதம் அரசாங்கத்தின் வருமானம் 25 வீதத்தினால் அதிகரித்துள்ளதாக நிதி ராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.

இலங்கை பிரஜை ஒருவர் வெளிநாடுகளுக்கு செலுத்த வேண்டிய கடன் | Each Sri Lankan Citizen Owes To Foreign Countries

அரசாங்கத்தினால் அறிமுகம் செய்யப்பட்டுள்ள பெறுமதி சேர் வரி அதிகரிப்பு காரணமாக இவ்வாறு வருமானம் அதிகரித்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அத்துடன், 219 பில்லியன் ரூபா வருமானம் எதிர்பார்க்கப்பட்ட போதிலும் 274 பில்லியன் ரூபா வருமானம் கிடைக்கப்பெற்றுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *