முஜிபுர் ரஹ்மான் வைத்தியசாலையில் அனுமதி!
ஐக்கிய மக்கள் சக்தியின் போராட்டத்தில் கலந்துகொண்டிருந்த கொழும்பு மாவட்ட முன்னாள் எம்.பி முஜிபுர் ரஹ்மான் திடீர் சுகயீனம் காரணமாக கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
சுவாசக் கோளாறு காரணமாக அவர் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அறிய முடிகின்றது.