மடிக்கக்கூடிய Smartphone அறிமுகம்!

உலகின் மெல்லிய மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் ஹானர் பிரான்டில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

அதன்படி, ஹானர் மேஜிக் V2 மாடல் வாடிக்கையாளர்களை கவர்ந்துள்ளது. கடந்த 2023 ஜூலை மாதம் அறிமுகம் செய்யப்பட்ட இந்த மாடல் தற்போது ஐரோப்பாவில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

ஹானர் மேஜிக் V2 போனில் பல்வேறு சிறப்பம்சங்கள் இடம் பெற்றுள்ளன. இந்த மாடலில் 7.9 இன்ச் OLED, 120Hz ரிப்ரெஷ் ரேட் கொண்ட மெயின் டிஸ்ப்ளே, 5.45 இன்ச் OLED கவர் டிஸ்ப்ளே, 50MP பிரைமரி கேமராவுடன் மூன்று சென்சார்கள், 50MP செல்ஃபி கேமரா உள்ளது.

மேலும், மிக மெல்லிய, ஆனால் உறுதியான வடிவமைப்பு, மிருதுவான தெளிவான காட்சிகள், திடமான கேமிங் மற்றும் பேட்டரி ஆயுள் தரமானதாக உள்ளது.

ஐரோப்பிய சந்தையில் ஹானர் மேஜிக் V2 மடிக்கக் கூடிய ஸ்மார்ட்போனகள் பர்பில் மற்றும் பிளாக் நிறத்தில் விற்பனைக்கு வருகின்றன.

அதன் விலைகள் முறையே ரூ. 1 லட்சத்து 79 ஆயிரத்து 585 மற்றும் ரூ. 1 லட்சத்து 11 ஆயிரத்து 172 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *