சினிமா இசையை ரசித்த சிறுவர்களுக்கு 12 வருட தண்டனை

வட கொரியாவில் பாப் இசை கேட்டு களித்த சிறுவர்களுக்கு 12 ஆண்டுகள் கடும் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

சினிமா பாடல் ரசித்த சிறுவர்கள்

வட கொரிய மக்கள் தென் கொரிய மக்களுடன் எத்தகைய தொடர்பும் வைத்துக் கொள்ளக் கூடாது என்றும், அப்படி தொடர்பு வைத்துக் கொண்டால்  சொந்த நாட்டு மக்களுக்கே தண்டனை வழங்கும் கொடூரம் நிலவி வருகிறது.

வட கொரிய ஜனாதிபதி கிம் ஜாங் உன்னின் உத்தரவின் பெயரில் இவை முன்னெடுக்கப்படுகிறது, வட கொரியாவில் தென் கொரிய நாடகங்களை பார்க்க தடை விதிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

அந்த வகையில், சமீபத்தில் தென் கொரியாவின் சினிமா பாப் இசையை ரசித்த இரண்டு 16 வயது சிறுவர்களுக்கு வட கொரியா தண்டனை விதித்துள்ளது.

விதிக்கப்பட்ட தண்டனை

வட கொரியாவில் சினிமா இசையை ரசித்த 2 பள்ளி சிறுவர்களுக்கு 12 ஆண்டுகள் கடும் வேலை செய்யும் தண்டனையை வடகொரியா அரசு வழங்கியுள்ளது.

இது குறித்து டோக்கியோ பல்கலைக்கழகத்தில் அரசியல் அறிவியல் துறையில் பேராசிரியர் சோய் க்யோங் ஹுய் பேசிய போது, சிறுவர்களுக்கு இது போன்ற கடுமையான தண்டனை விதித்ததன் மூலம் வட கொரிய மக்களுக்கு அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.

south-korean-12-years-severe-punishment, வட கொரியாவில் சினிமா பார்த்த பள்ளி சிறுவர்களுக்கு 12 ஆண்டுகள் தண்டனை: மக்களுக்கு எச்சரிக்கை

மேலும் இந்த சம்பவத்தின் மூலம் தென் கொரிய கலாச்சாரம் வட கொரியாவில் ஊடுருவி வருகிறது என்பதை உறுதிப்படுத்தியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *