துபாயில் இருந்து வெளிநாடுகளுக்கு தப்பியோடும் போதைப் பொருள் கடத்தல்காரர்கள்:

துபாய் நாட்டில் தலைமறைவாக இருக்கும் இலங்கையில் போதைப் பொருள் வியாபாரத்தை வழிநடத்தி வரும் முன்னணி போதைப் பொருள் கடத்தல்காரர்களை கைது செய்ய விசேட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ள நிலையில், அவர்கள் துபாய் நாட்டை கைவிட்டு ஐரோப்பிய நாடுகள் உட்பட வெளிநாடுகளுக்கு தப்பிச் செல்ல ஆரம்பித்துள்ளதாக தெரியவருகிறது.

இந்த போதைப் பொருள் கடத்தல்காரர்கள் தம்மை செல்வந்த வர்த்தகர்களாக காட்டிக்கொண்டு, இத்தாலி, இங்கிலாந்து, பிரான்ஸ், ருமேனியா போன்ற நாடுகளுக்கு தப்பிச் செல்வதாக கூறப்படுகிறது.

இலகுவாக விசா பெறக்கூடிய நாடுகள் மற்றும் வெளிநாட்டவர்களளை அதிகளவில் பரிசோதனைக்கு உட்படுத்தாத நாடுகளை இவர்கள் தெரிவு செய்துள்ளனர்.

இதனையடுத்து துபாய் அரசு, அந்நாட்டு பொலிஸார் மற்றும் சர்வதேச பொலிஸாருடன் பேச்சுவார்த்தை நடத்தி, இந்த போதைப் பொருள் கடத்தல்காரர்களை கைது செய்து, இலங்கை கொண்டு வரும் விசேட வேலைத்திட்டம் தற்போது ராஜதந்திர மட்டத்தில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இதனை அறிந்துக்கொண்ட பின்னர், இந்த போதைப் பொருள் கடத்தல்காரர்கள் வெளிநாடுகளுக்கு தப்பிச் செல்ல ஆரம்பித்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *