தொலைபேசிக்கு போடும் கவரால் ஏற்படும் ஆபத்து

பாதுகாப்புக்காக போடப்பட்டும் மொபைல் பேக் கவரால் என்னென்ன பாதிப்புகள் ஏற்படும் என்பதை இப்பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

நவீன காலத்தில் நாம் அனைவரும் தற்போது தொலைபேசியை உபயோகித்து வருகிறார்கள்.

தொலைபேசி உபயோகிக்கும் பெரும்பாலானோர் பேக் கவர் உபயோகித்து வருகிறார்கள். தங்கள் தொலைபேசி அது பாதுகாக்கும் என நினைத்து பேக் கவர் உபயோகிக்கிறார்கள்.

ஆசையாக வாங்கிய தொலைபேசியில் கீரல்கள் ஏற்பட்டுவிடுமோ என்ற எண்ணத்தில் தான் மக்கள் பேக் கவரை பயன்படுத்துகின்றனர்.

ஆனால் பேக் கவரால் போனுக்கு பாதிப்பு ஏற்படும் என்பது பலருக்கும் தெரியாது.

தொலைபேசி பொதுவாகவே சூடை வெளியேற்றும். இதில் வெளியேறும் சூடு பேக் கவரால் அங்கேயே நின்று அதிக வெப்பமடைகிறது. இதனால் தொலைபேசியின் ஆயுள் விரைவில் முடிவடையும் என கூறப்படுகிறது.

குறிப்பாக சார்ஜ் போடும் போது பேக் கவர் இருப்பதால் அதிகமாக வெப்பமடைந்து அதன் இயல்பே மாறி சரியாக சார்ஜ் செய்ய முடியாத நிலையில் செல்வதாக கூறப்படுகிறது.

இது ஒரு புறம் இருக்க நல்ல தரமான பேக் கவர் போடவில்லை என்றால் அதில் அதிக பக்றீரியாக்கள் சேரும் அபாயமும் உள்ளது.

24 மணி நேரத்தில் முக்கால் வாசி நாள் தொலைபேசியை கையில் வைத்திருப்பதால் இந்த பக்றீரியாக்கள் நம் உடலுக்கு கேடு விளைவிக்கும்.

இது தவிர சில தொலைபேசி பேக் கவரில் காந்தம் பொறுத்தப்பட்டிருந்தால், இது ஜிபிஎஸ் மற்றும் திசைக்காட்டி ஆகியவற்றில் சிக்கல்களை ஏற்படுத்தும்.

இதுவரை டெக்னிக்கலாக ஏற்படும் சிக்கல்களை பற்றி பார்த்தோம். ஒரு தொலைபேசியை நாம் வாங்கும் போது அதன் கலர், வடிவமைப்பு என அனைத்தையும் தேர்ந்தெடுத்து வாங்குவோம். ஆனால் பேக் கவர் போடுவதன் மூலம் அதன் அழகு மறைந்துவிடுகிறது.

தொலைபேசியை பாதுகாப்பாக வைப்பதற்காக போடப்படும் பேக் கவரால் இத்தனை சிக்கல்கள் ஏற்படுகிறது என்பது யாருக்கும் தெரியாது. பேக் கவரை தவிர்க்க முடியவில்லை என்றால் குறிப்பாக கேம் விளையாடும் போதும், சார்ஜ் போடும் போதும் மட்டும் கழற்றி வைப்பது அவசியமாகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *