மகனால் வாடகை வீட்டுக்கு தள்ளப்பட்ட பெரும் கோடீஸ்வரர்!

 

இந்தியாவில் ஒருகாலத்தில் அம்பானி மற்றும் அதானியைவிடவும் பெரும் கோடீஸ்வரராக இருந்த Vijaypat Singhania தற்போது சொத்துக்களை இழந்து வாடகை வீட்டில் குடியிருக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்.

இந்தியாவின் பெரும் கோடீஸ்வரர்களில் ஒருவராக வலம்வந்த Vijaypat Singhania ஒரு தவறான முடிவால் தனது சொத்துக்களை இழந்து வாடகை குடியிருப்பில் வசித்து வருகிறார்.

இளம் வயதில் முகேஷ் அம்பானி உட்பட தற்போதைய பல முதன்மையான கோடீஸ்வரர்களை விடவும் பெரும் கோடீஸ்வரராக இருந்தார் Vijaypat Singhania. அபோதே அவர் ரேமண்ட் குழுமத்தின் உரிமையாளராக இருந்தார்.

அனைத்தும் நல்லபடியாகவே சென்றுகொண்டிருந்த நிலையில், சொந்த மகனால் வீட்டை விட்டே Vijaypat Singhania துரத்தப்பட்டார். தமது மகன் கெளதம் பெயரில் அனைத்து சொத்துக்களையும் Vijaypat Singhania எழுதி வைத்த பின்னரே, அவரது வாழ்க்கையின் கடுமையான நாட்கள் துவங்கியது.

வீட்டை விட்டும் வெளியேற்றும் நிலை
தந்தைக்கும் மகனுக்குமான உறவு கடும் விரிசல் கண்டதுடன், ஒருகட்டத்தில் நிலத் தகராறு இருவரையும் இரண்டாக பிரித்துள்ளதுடன், Vijaypat Singhania-ஐ வீட்டை விட்டும் வெளியேற்றும் நிலை உருவானது.

Vijaypat Singhania உருவாக்கிய ரேமண்ட் குழுமத்தின் தற்போதைய சந்தை மதிப்பு என்பது ரூ 11,575.04 கோடி என்றே கூறப்படுகிறது. ரேமண்ட் குழுமத்தின் தற்போதைய உரிமையாளர் கெளதம் சிங்கானியாவின் சொத்து மதிப்பு ரூ 11,658 கோடி எனவும் தெரியவந்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *