கப்பலில் வந்ததால் கப்பக்கிழங்கு…!

….
பதினேழாம்நூற்றாண்டின் இறுதியில் போர்ச்சுகீசிய மாலுமிகள் மரவள்ளிக்கிழங்கை கொண்டுவந்து கொச்சியிலும் கொல்லத்திலும் தங்கள் வீட்டின் பின்புறம் பயிரிட்டனர்.

1860 முதல் இந்தியாவை தாக்கிய பெரும் பஞ்சம் கேரளத்தையும் பாதிக்கத் தொடங்கியது.

அப்போது திருவிதாங்கூரின் அரசராக இருந்தவர் விசாகம் திருநாள் ராமவர்மா. திருவிதாங்கூர் சமஸ்தானத்தின் அனைத்து பகுதிகளிலும் மரவள்ளிக்கிழங்கை பயிரிட முயற்சி எடுத்தார்.

பஞ்சம் ஏற்பட்டபோது போர்ச்சுகீசியர் கொண்டுவந்த மரவள்ளியைப்பற்றி கேள்விப்பட்டு கொல்லம் ஊருக்குச்சென்று அந்த செடியைப்பார்த்து, பணம் கொடுத்து பெற்று நாடெங்கும் மரவள்ளிக்கிழங்கை விவசாயம் செய்ய உத்தரவு பிறப்பித்தார்.

”அதென்ன கம்பை நட்டுவெச்சா உள்ளே கிழங்கு வரும்”னு மக்களுக்கு சந்தேகம் ஏற்பட்டது.

நிறைய பேர் கிழங்கு விவசாயம் பண்ண மாட்டோம்னு சொல்ல, கிழங்கு சாகுபடி செய்யலைன்னா கசையடின்னு அறிவிச்சதுதான் தாமதம் ஊரெங்கும் மரவள்ளிக்கிழங்கு விவசாயம் செய்ய மக்கள் தயாரானாங்க.

சாகுபடி செஞ்சாங்க… அறுவடை செஞ்சாங்க..

மரச்சீனி பயிரிடவேண்டும் என அரசர் முதலில் உத்தரவிட்டிருந்தும் மக்கள் அதை பயிரிட ஆர்வம் காட்டவில்லை. எப்படி மக்களை கொண்டு சேர்க்குறதுன்னு யோசிச்ச மன்னர் ஒரு தந்திரம் செய்தார்.

நகரின் அனைத்து பகுதியிலும் மரவள்ளித் தோட்டங்கள் உருவாக்கி, மரவள்ளி மிகுந்த சத்துள்ள உணவானதால் அதன் தண்டுகளை யாராவது திருடினால் கடுமையான தண்டனை வழங்கப்படும் என அறிவித்தார்.

மன்னரின் தந்திரம் வீண்போகவில்லை.

சில நாட்களிலேயே மொத்த மரவள்ளி தண்டுகளும் திருட்டு போனது. நகர், கிராமப்புறம் என எங்கும் தண்டுகளை வெட்டிய மக்கள், மரச்சீனி விவசாயம் செய்தனர்.

திருவிதாங்கூர் ராஜ்ஜியத்தின் காடுகளும் வனங்களும் கொஞ்சம் கொஞ்சமாக அழிக்கப்பட்டு மரச்சீனி பயிரிடப்பட்டது. . வளம் மிக்க நாடாக மாறியது திருவிதாங்கூர்.

ஆரம்பத்தில் கப்பலில் இருந்து இங்கு கொண்டு வந்ததால் கப்பல் கிழங்கு என அழைக்கப்பட்டு பின்னர் கப்பக்கிழங்கு என மருவியதாகக் கூறுகிறார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *