2023ல் 10,000 ஆணுறைகளை ஆர்டர் செய்த ஒற்றை நபர்!

 

இந்தியாவில் 2023ஆம் ஆண்டில் தனிநபர் ஒருவர் Blinkit-ல் இருந்து சுமார் 10,000 ஆணுறைகளை ஆர்டர் செய்துள்ளது தெரியவந்துள்ளது.

இந்த ஆண்டு முடிவடையும் நிலையில், பிளிங்கிட் நிறுவனம் 2023-ஆம் ஆண்டின் சில சுவாரஸ்யமான விற்பனை trendகளை ‘Blinkit Trends 2023’ என வெளிப்படுத்தியுள்ளது.

அதன்படி, தெற்கு டெல்லியைச் சேர்ந்த ஒரு வாடிக்கையாளர் 2023-ஆம் ஆண்டில் Zomato-க்குச் சொந்தமான விரைவான விநியோக தளமான Blinkit-ல் இருந்து 9,940 ஆணுறைகளை (Condoms) ஆர்டர் செய்துள்ளார்.

அதேசமயம், இந்த ஆண்டு குருகிராமில் 65,973 லைட்டர்கள் (Lighter) ஆர்டர் செய்யப்பட்டுள்ளன. இதே குருகிராம் நகரம் இந்த ஆண்டு குளிர்பானங்களை விட அதிக Tonic waterரை (carbonated soft drink) ஆர்டர் செய்துள்ளது.

இந்த ஆண்டு சுமார் 30,02,080 PartySmart tablets (மது அருந்திய பிறகு Morning Hangoverஐ தவிர்க்க பயன்படுத்தப்படும் மாத்திரை) விநியோகிக்கப்பட்டுள்ளன.

பெங்களூரைச் சேர்ந்த ஒருவர் ரூ.1,59,900 மதிப்புள்ள iPhone 15 Pro Max மொபைல், ஒரு பொக்கெட் Lay’s மற்றும் ஆறு வாழைப்பழங்களை ஆர்டர் செய்துள்ளார்.

நள்ளிரவுக்குப் பிறகு சுமார் 3,20,04,725 Maggi பொக்கெட்டுகள் விநியோகிக்கப்பட்டன. ஒரு வாடிக்கையாளர் ஒரு ஆர்டரில் 101 லிட்டர் Mineral Water வாங்கியிருந்தார்.

இந்த ஆண்டு பிளிங்கிட் மூலம் 80,267 Gangajal போத்தல்கள் விநியோகிக்கப்பட்டுள்ளன. 2023ல் ஒருவர் 4,832 குளியல் சோப்புகளை வாங்கியுள்ளார்.

இந்த ஆண்டு “காலை 8 மணிக்கு முன் சுமார் 351,033 Printouts விநியோகிக்கப்பட்டன, மேலும் 1,22,38,740 Ice Creams மற்றும் 8,50,011 ice cube packets, 45,16,490 Eno packets ஆர்டர் செய்யப்பட்டன.

ஹைதராபாத்தில் இருந்து ஒருவர் 17,009 கிலோ அரிசியை 2023-ல் ஆர்டர் செய்துள்ளார்.

யாரோ ஒருவர் ஒரு மாதத்தில் 38 உள்ளாடைகளை ஆர்டர் செய்துள்ளார். மற்றொரு வாடிக்கையாளர் 972 Mobile Chargerகளை ஆர்டர் செய்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *