மகிந்த பெற்றுக்கொண்ட கடனே இலங்கை வங்குரோத்து அடைய காரணம்!

கடந்த 2012 ஆம் ஆண்டு முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச 6.5 சத வீதம் என்ற அதிக வட்டிக்கு 100 கோடி அமெரிக்க டொலர் கடனே இலங்கை வங்குரோத்து அடைய காரணம் என ஐக்கிய குடியரசு கட்சியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.

அரசாங்கத்தின் வரவு செலவுத்திட்டத்திற்கு ஆதரவாக வாக்களித்த மகிந்த ராஜபக்ச தற்போது வரிச்சுமை அதிகம் எனக்கூறி ஊடக அறிக்கையை வெளியிடுவது கேலிக்குரியது.

மகிந்த ராஜபக்ச 2012 ஆம் ஆண்டு பெற்றுக்கொண்ட கடனை 2022 ஆம் ஆண்டு ஜூலை மாதம் முழுமையாக செலுத்த வேண்டும். இறுதியில் அந்த கடனை செலுத்த முடியாத காரணத்தினால், நாடு வங்குரோத்து நிலைமைக்கு சென்றது.

0.1 சத வீதம் என்ற நிவாரண வட்டிக்கு கடனை பெற்றுக்கொள்ளும் பின்னணி இருந்த போது, மகிந்த ராஜபக்ச 6.5 சத வீதம் என்ற அதிக வட்டிக்கு கடனை பெற்றார் எனவும் சம்பிக்க ரணவக்க குற்றம் சுமத்தியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *