ஒரே நேரத்தில் 24ஆயிரம் பெண்கள் தீக்குளித்து தற்கொலை!

ராஜபுத்திர அரசர் ராவல் ஜைசால் என்பவரால் 1156ஆம் ஆண்டு கட்டப்பட்ட ஜைசால்மார் கோட்டையை கிட்டத்தட்ட 8 ஆண்டுகள் அலாவுதீன் கில்ஜியின் படைகள்முற்றுகையிட்டன..

கோட்டையினுள் சேமிக்கப்பட்டிருந்த உணவு தீர்ந்துபோகிறது.

ஜைசால்மரின் அரசர் ஜெத்சியும் மரணமடைகிறார்.

உணவு பற்றாக்குறை, அரசரின் இழப்பு ஆகிய காரணங்களினால் ஒரு கட்டத்தில் தோல்வி உறுதி என்பதை உணர்ந்த கோட்டையினுள் இருந்த பட்டி வம்ச பெண்கள் ‘ஜௌஹர்’ என்ற சடங்கை மேற்கொள்ள துணிகின்றனர்.

போரில் தோல்வி உறுதியான பின்பு எதிரி படை வீரர்களின் கைகளில் சிக்கி தங்களின் மானத்தை இழக்காமல் இருக்க ரஜபுத்திர அரசியும், பெண்களும் தங்களை தாங்களே நெருப்பிட்டு உயிர் மாய்த்துக்கொள்ளும் சடங்கே ஜௌஹர் ஆகும் .

கில்ஜி படைவீரர்கள் கோட்டையை கைப்பற்றிவிடுவார்கள் என்ற நிலை வந்ததும் இக்கோட்டையினுள் இருந்த 24,000 ரஜபுத்திர பெண்களும் தங்களை தாங்களே தீயிட்டு மாய்த்துக் கொள்கின்றனர்.

தீக்குளிக்க விரும்பாதவர்கள் தங்கள் கணவனின் கைகளால் சிரங்களை கொய்து கொண்டனர்.

ஒரே நேரத்தில் 24,000 பெண்கள் தீக்குளித்து தற்கொலை!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *